நோக்கியா என்ற பெயரைக் கேட்டவுடன் பட்டன் மொபைல்கள் தான் ஞாபகத்திற்கு வரும். இவர்களது நேர்த்தியான வடிவமைப்பும், கட்டமைப்பும் தான் நிறுவனத்தின் மீதுள்ள அதீத நம்பிக்கைக்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய நோக்கியா 130 மியூசிக், நோக்கியா 150 ஆகிய இரண்டு 2023 மாடல் பட்டன் போனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
‘பெயர கேட்டா சும்மா அதிருதுல’ என்ற ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த ரஜினிகாந்த பட வசனம் தான் மனதில் தோன்றும். அந்த அளவுக்கு மக்களுடன் ஒன்றி உறவாடி இருக்கிறது நோக்கியா. இப்படி இருக்கும் சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போன்கள் மீது அதிக கவனம் செலுத்தாமல், நிறுவனம் பட்டன் போன்களை இப்போதும் அறிமுகம் செய்துவருகிறது.
நீடித்து உழைக்கும் பேட்டரி, அழைப்பின் தரம் போன்ற பல அம்சங்கள் இதில் அடங்கி உள்ளதால், கிராமப்புற மக்களுக்கு இப்போதும் இந்த போன் ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது. எனினும், டெக் வல்லுநர்கள் கருத்தின்படி, நோக்கியா பட்டன் ஃபோன்களை அறிமுகம் செய்தாலும், சில புதிப்புகளை இன்னும் மேற்கொள்ளாமல் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். மின்னணு கழிவுகளை குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் டைப்-சி சார்ஜரை தான் இனி அனைத்து மின்னணு சாதனங்களும் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.
நோக்கியா அதில் இருந்து மாறியதாகத் தெரியவில்லை. பட்டன் ஃபோனுக்கு அதெல்லாம் எதுக்கு என்று கேள்வி கேட்கும் நபர்கள், ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் கேட்ஜெட்டுகளில் கூட டைப்-சி அடாப்டர் நிறுவப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, தற்போது வெளியாகியுள்ள நோக்கியா 130 மியூசிக், நோக்கியா 150 ஆகிய இரண்டு போன்களின் அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
நோக்கியா 130எம் (Nokia 130M - 2023) :
- டார்க் ப்ளூ, பர்பிள், லைட் கோல்டு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது
- எம்பி3 பிளேயர், எஃப்.எம் ரேடியோவுக்காக சத்தமான ஸ்பீக்கர் வசதி
- ஹெட்ஃபோன் இல்லாமல் எஃப்.எம் ரேடியோவை அணுகலாம்
- 2.4 இன்ச் டிஸ்ப்ளே
- 2000 தொடர்புகளை சேமிக்கும் வசதி
- 500 குறுந்தகவலை சேமிக்கும் இன்பாக்ஸ்
- நீடித்து உழைக்கும் 1450 mAh பேட்டரி
- டார்ச் லைட்
- மைக்ரோ யூஎஸ்பி சார்ஜிங்
நோக்கியா 150 (Nokia 150 - 2023) :
- கறுப்பு, நீலமயில், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது
- 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
- 0.3 மெகாபிக்சல் விஜிஏ கேமரா எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது
- 2000 தொடர்புகளை சேமிக்கும் வசதி
- 500 குறுந்தகவலை சேமிக்கும் இன்பாக்ஸ்
- கைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி
- நீடித்து உழைக்கும் 1450 mAh பேட்டரி
- டார்ச் லைட்
- ஹெட்போன் ஜாக்
- மைக்ரோ யூஎஸ்பி சார்ஜிங்