ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி

post-img
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேடுதல் வேட்டையின்போது இன்று காலை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து, அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. எனவே, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை தேடுதல் வேலையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதில் தாக்குதலில் மொத்தம் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குல்காம் மாவட்டத்தின் கதர் பகுதியில் நடந்திருக்கிறது. இது குறித்த மேலும் விவரமான தகவல் விரைவில் காவல்துறை சார்பில் பகிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post