சென்னை: தெலுங்கு சினிமா உலகை தனி ஆளாக லெப்ட் ஹேண்டில் டீல் செய்து வருகிறார் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி. அவர் எடுக்கும் முடிவுகள்.. அளிக்கும் பேட்டிகள் அந்த திரை உலக ரசிகர்களை.. பிரபலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்திய திரை வுட்களில் மோசமான வுட் எது.. அதிகம் வருமானம் ஈட்டும் வுட் எது என்று கேட்டால்.. அது இரண்டிற்கும் ஒரே பதில்தான்.. அது டோலிவுட்! ஒரு உட் முழுக்க 3-4 குடும்பங்கள்தான் உள்ளன. அதற்கு உள்ளே 2 டஜன் ஹீரோக்கள் உள்ளனர். சுற்றி சுற்றி பார்த்தால் எல்லோரும் மாமன் மச்சான் - அண்ணன் தம்பிகள்தான். ஆனால் ஒவ்வொரு ஹீரோவிற்கும் பல லட்சம் ரசிகர்கள்.. பல ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன.
வாரம் வாரம் படத்திற்காக சண்டை போடுவது தாண்டி மற்ற மாநில ரசிகர்களுடன் மோதுவது.. சில சமயங்களில்.. கைகலப்பு.. வரை கூட செல்லும் அளவிற்கு தெலுங்கு சினிமா உலகம் கொடூரமானது. அதிலும் பெரும்பாலும் தனிப்பட்ட வகையில் அச்சுறுத்தும் வகையில் பேசுவது, பர்சனல் அட்டாக், பாலியல் ரீதியான அட்டாக் செய்வது போன்ற நடவடிக்கைகள் எல்லாமே தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கைவந்த கலை. சரி இப்படிப்பட்ட ரசிகர்களை.. அவர்களின் ஹீரோக்கள் மதிக்கிறார்களா என்றால் இல்லை.. மனிதர்களாக கூட தங்களின் ரசிகர்களை தெலுங்கு ஹீரோக்கள் மதிப்பதே இல்லை என்பதே உண்மை. அதற்கு ஆதாரங்களும் உள்ளன!
1. ரசிகை ரேவதி மரண வழக்கில் கைதாகி வெறும் 12 மணி நேரத்தில் விடுதலை ஆன அல்லு அர்ஜுனை பார்க்க பல நடிகர்கள்.. முன்னணி ஹீரோக்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். முக்கியமாக அல்லு அர்ஜுன் கைதானது என்னவோ வெறும் 3-4 மணி நேரம். அதற்குள் வெளியே வந்துவிட்டார் அப்படிப்பட்டவரை பார்க்க பல நடிகர்கள் கூடினார்கள்.
2. ஆனால் அதில் ஒருவர் கூட இறந்த ரேவதி குடும்பத்தை பார்க்க செல்லவில்லை. அல்லு அர்ஜுன் கூட செல்லவில்லை.
3. யாருமே மூளை இறந்து கோமாவில் இருக்கும் அந்த சிறுவனை பார்க்க செல்லவில்லை.
4. நடிகர்களை பொறுத்தவரை சக நடிகர்கள்தான் அவர்களின் குடும்பம் ... ரசிகர்கள் அவர்களின் குடும்பம் இல்லை என்பதை இது உணர்த்தி உள்ளது. இறந்து போன அந்த பெண்ணின் குடும்பத்திற்காக ஆக்சன் எடுத்த ரேவந்த் ரெட்டியின் நடவடிக்கை சரியானது .. அவரின் நிலைப்பாடு சரியானது என்பதும் புலனாகிறது.
5. நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகை பலியானது தெரிந்தும் கூட.. தொடர்ந்து விடாமல் 3 மணி நேரம் படம் பார்த்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்த்தது வீடியோ மூலம் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
6. பெண் இறந்துவிட்டார் என்று கூறியும் 3 மணி நேரம் படத்தை முடித்து விட்டு அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். அவரிடம் தியேட்டரில் இருக்கும் போதே ரசிகை பலியானது பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடைசியில் பாடல் முடியும் வரை அவர் இருந்துவிட்டு அதன்பின்பே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
7. அதாவது ரசிகர் செத்தால் எனக்கு என்ன.. எனக்கு தேவை எல்லாம் சப்புன்னு அறைவேன் ராஜா பாடல்தான் என்று படம் முடியும் வரை அல்லு அர்ஜுன் அங்கே இருந்துள்ளார்.
சமீபத்தில் கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை அடித்தே கொன்றார். தனது ரசிகர் மன்ற நிர்வாகி அவர். இதுதான் சினிமா உலகம். ரசிக மனோபாவம் எதற்கும் உதவாது என்பதற்கு இதுவே சான்று. இதன் காரணமாகவே ரேவந்த் ரெட்டியின் நடவடிக்கையும் இப்போது வரவேற்பை பெற தொடங்கி உள்ளது.
அல்லு அர்ஜூன் மீது ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல், அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார். அதோடு தெலங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. தான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது, என்று கூறி உள்ளார்.
மொத்த திரை உலகமும் ஒரு பக்கம் நிற்க.. ரேவந்த் ரெட்டி தனியாக நின்று அந்த திரை உலகை கோல் எடுத்து அடித்துக்கொண்டு இருக்கிறார்! ஏனென்றால் தெலுங்கு நடிகர்கள் படங்களில் காட்டுவது போல இவரிடம் இருப்பது ரீல் பவர் அல்ல.. அது முதல்வரின் ரியல் பவர்!