கான்பூர் : மனைவியின் ரீல்ஸ்கள் ஒவ்வொன்றையும் பார்த்து கொந்தளித்து போனார் கணவர்.. இதையடுத்து இவர் செய்த காரியம் ஒட்டுமொத்த உத்தரபிரதேச மாநிலத்தையும் கதிகலங்க செய்துவிட்டது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியின் லக்வாயா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பெயர் சீமா.. இவர்களுக்கு வன்ஷிகா(10), அன்ஷிகா(6), பிரியான்ஷ்(3) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனால், தம்பதிக்குள் நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.. குறிப்பாக, சீமாவின் நடத்தை மீது ராஜுவுக்கு நிறைய சந்தேகம் இருந்து வந்துள்ளது... அதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ரீல்ஸ் சீமா: இதற்கிடையில், சீமாவுக்கு ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட பக்கத்தில் ரீல்ஸ்களை பதிவிட்டு வந்துள்ளார்... இந்த ரீல்கள் பார்வையாளர்களின் கவனத்தை பெற துவங்கிவிட்டது. ஒருகட்டத்தில், அந்த ரீல்ஸ்களுக்கு பல்வேறு ஆதரவு கருத்துக்கள் கிடைத்தன. அதேபோல, தெரியாத எண்ணில் இருந்தெல்லாம் சீமாவுக்கு போன்கள் வந்துள்ளன.
ஏற்கனவே சந்தேகத்திலிருந்த ராஜு, இப்படி போன்கள் வருவதை பார்த்ததுமே மேலும் கொந்தளித்துள்ளார்.. இதனால் சீமாவிடம் முன்பைவிட அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. சம்பவத்தன்றும், இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிவிட்டது. இதனால் ஆவேசமடைந்த ராஜு, சீமாவை செங்கல்லால் சரமாரியாக அடித்துள்ளார்.. இதில் சீமா மயங்கி கீழே சரிந்துவிட்டார்.
போர்வை: ஆனால், அப்போதும் ராஜுவின் ஆத்திரம் அடங்காமல், தன்னுடைய 3 குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி தூங்க வைத்தார்.. குழந்தைகளும் தன்னுடைய அப்பாவுக்கு பயந்து கொண்டு, போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, வெறுமனே கண்ணை மூடி படுத்து கொண்டனர். குழந்தைகள் தூங்கிவிட்டதாக நினைத்த ராஜு, சீமாவை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.. ஆனால், இந்த கொடூரத்தை போர்வைக்குள்ளிருந்தே 3 பெண் குழந்தைகளும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மனைவியை வெட்டி கொன்றதுமே, தன்னுடைய செல்போனையும், மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு ராஜூ அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, சீமாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு: இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பிச்சென்ற ராஜுவை தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் ராஜூ இன்னமும் பிடிபடவில்லை. மகள்களின் கண்முன்னாலேயே, மனைவியை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்த பகுதியில் ஏற்படுத்தி வருகிறது.