அடிலைடு: இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டி இன்று அடிலைடு மைதானத்தில் தொடங்கும். இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுவதால் இதில் பிங்க் நிற பந்துகளே பயன்படுத்தப்படும். வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில், பகலிரவு போட்டிகளில் மட்டும் ஏன் பிங்க் பந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய அணி இப்போது பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போதிலும், அதன் பிறகு கம்பேக் கொடுத்தது. அந்த டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதற்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது அடிலைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா மோதும் இந்த டெஸ்ட் போட்டி என்ன தான் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்குத் தொடங்கினாலும், இது ஆஸ்திரேலியாவில் பகலிரவு போட்டியாக 2.30 மணிக்குத் தான் தொடங்குகிறது.
பிங்க் பந்து: வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து தான் பயன்படுத்தப்படும். பெர்த்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் கூட இந்த பந்து தான் பயன்படுத்தப்பட்டதை நாம் பார்த்து இருப்போம். ஆனால், இன்று அடிலைடு மைதானம் நடக்கும் போட்டியில் 2வது டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிற பந்திற்கு பதிலாக பிங்க் கலர் பாலை பயன்படுத்தவுள்ளனர்.
இந்த டெஸ்ட் என்று இல்லை எப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகள் பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறதோ.. அப்போதெல்லாம் இந்த இளஞ்சிவப்பு அதாவது பிங்க் கலர் பாலை தான் யூஸ் செய்வார்கள். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதல் பிங்க் டெஸ்ட் போட்டி: டெஸ்ட் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அவர்களைக் கவரும் வகையில் டெஸ்ட் போட்டியைப் பகலிரவு போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே இதை அடிலைடு மைதானத்தில் தான் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் தான் முதலில் பிங்க நிற பந்து பயன்படுத்தப்பட்டது.
என்ன காரணம்: பகலிரவு போட்டி என்றால் என்ன அதிலும் சிவப்பு நிற பாலையே பயன்படுத்தலாமே என்றே கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கு முக்கிய காரணம் visibility . அதாவது சிவப்பு நிற பந்து இரவு நேரங்களில் லைட் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரியாது. வழக்கமான பகலில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் கூட மாலை நேரங்களில் சில முறை போதிய வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை முன்கூட்டியே நிறுத்த இதுதான் காரணம். இரவு நேரங்களில் லைட் வெளிச்சத்தில் மைதானங்களில் இவை தெளிவாகத் தெரியாது.
ஆனால், பிங்க் நிற பந்துகள் அப்படி இல்லை.. அவை இரவு லைட் வெளிச்சத்தில் கூட நன்றாகவே தெரியும். இது பேட்ஸ்மேன்களும் பீல்டர்களுக்கும் பந்தை எளிதாகப் பாலோ செய்ய உதவுகிறது.
வெள்ளை பந்து ஏன் முடியாது: உங்களுக்கு இன்னொரு கேள்வி வரலாம்.. ஒரு நாள் போட்டிகளுக்குப் பயன்படுத்துவதைப் போல வெள்ளை நிற பந்துகளைப் பயன்படுத்தலாமா.. அதைத் தான் பகலிரவு ஒரு நாள் போட்டிக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கலாம்.. ஆனால், டெஸ்ட் போட்டியில் வீரர்கள் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து இருப்பதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
Weather Data Source: Wettervorhersage 21 tage