இரு நாடுகளுக்கும் முக்கியமான தருணம் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன்-அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் பைடனும்-பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதையடுத்து அமெரிக்க அதிபர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி-ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, ஆனந்த் மகேந்திரா, இந்திரா நூயி, நிகில் காமத், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள், இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் அமெரிக்கா அதிபர் ஜோபைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி உரையாற்றினர். விருந்தில் பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இன்று இந்தியாவிடனான நட்பை கொண்டாடுவதாக தெரிவித்தார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், இரு நாடுகளுக்கும் முக்கியமான தருணம் என பெருமிதம் தெரிவித்தார்.