கோவில் திருவிழாக்களில் யானைகள்.. கேரள நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டுக்கு உச்சநீதிமன்ற அதிரடி தடை

post-img
புதுடில்லி: கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களின் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்துவதற்கு கேரள உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் என்றாலே பாரம்பரியம் மற்றும் கலசாரங்களைக் கடைப்பிடிப்பதற்கான பெயர்பெற்ற மாநிலமாகும். காட்ஸ் ஓன் கன்ட்ரி என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் எழில் கொஞ்சும் இயற்கை அமைப்பும், நிறைய கோயில்களும் உள்ளன. கேரள மாநிலத்தில் கோயில் விஷேசங்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கோவில் திருவிழா என்றாலே செண்டை மேள தாளங்களும், அலங்கரிக்கப்பட்ட யானைகளும் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். இதுபோன்ற சமயங்களில் யானைகளுக்கு மதம் பிடித்தல் உள்ளிட்ட அசாம்பாவிதங்களும் ஏற்படும். இந்த அசாம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக கோவில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்த கேரள உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தவிட்டது. அந்த உத்தரவில், கோவில் திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்ட யானைகளைப் பயன்படுத்தும்போது நிறுத்தப்படும் ஒரு யானைக்கும், மற்றொரு யானைக்கும் இடையே 10 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கும், யானை இருக்கும் பகுதிக்கும் குறைந்தபட்டம் 25 அடி தூரம் இருக்க வேண்டும். அதேபோல, பட்டாசு வெடிக்கும் பகுதிகளின் அருகே யானைகளை நிறுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து யானைகளை 320 அடி தூரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். கோவில் திருவிழாக்களின் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு குறைந்தபட்டம் மூன்று நாட்களாவது ஓய்வளிக்க வேம்டும். யானைகளை கோயில் விசேஷங்களில் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அத்திவாசிய மத சம்பிரதாயம் கிடையாது என்று கேரள நீதிமந்றம் தெரிவித்திருந்தது. திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெறும் திருவிழாவாகும். இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சூரில் குவிவது வழக்கம். இந்த திருவிழாவில் வரிசையாக ஏராளமான யானைகள் அலங்கரித்து நிற்க வைக்கப்பட்டு விமரிசையாக திருவிழா கொண்டாடப்படும். இந்நிலையில், கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள நீதிமன்றம் விதித்தால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவசம் வாரியங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றம் சார்பில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் சாத்திம் இல்லாதவை என்றும், விதிகளை உருவாக்குவதற்கு நீதிமன்றத்துக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை, அதற்கென அதிகாரம் படைத்த தனி அதிகாரிகள் உள்ளனர் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, கோவில் யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், மேலாண்மை மற்றும் பராமரிப்பு விதிகள், 2012 இன் கீழ் கேரள மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டது.

Related Post