நள்ளிரவில் வந்த பார்சல்.. திறந்த பார்த்தால் உள்ளே ஆணின் சடலம்.. அலறிய ஆந்திரா.. பகீர் சம்பவம்

post-img
அமராவதி: ஆந்திராவில் மின்சாதன பொருட்கள் என்று கூறி இளைஞர் ஒருவரின் சடலம் அடங்கிய பார்சல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பார்சலுடன் ரூ. 1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் லெட்டரும் இருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போதெல்லாம் ஆன்லைன் டெலிவரிகளில் நாம் எதிர்பார்க்காத பல பொருட்கள் வருவது ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆனால், இங்கே பெண் ஒருவருக்கு உயிரிழந்த நபரின் சடலம் வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆன்லைன் டெலிவரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருக்கும் பார்சல் வந்துள்ளதுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி என்ற ஊரில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் நடந்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் நாக துளசி என்ற பெண் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அவர் வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பித்து இருந்தார்.. அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கோரி க்ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்பில் இருந்து முதலில் அந்த பெண்ணுக்கு டைல்ஸ் கற்கள் அனுப்பப்பட்டன. அந்த பெண் மீண்டும் வீடு கட்ட உதவி வேண்டும் என்ற கோரிக்கையுடன் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் உதவி கோரினார். இந்த முறை வீட்டிற்குத் தேவையான மின்சாதனங்களை வழங்குவதாகச் சமிதி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்ற மெசேஜ் வாட்ஸ்அப்பில் அந்த பெண்ணுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் மின்சாதனங்கள் இருப்பதாகச் சொல்லி, டெலிவரி ஏஜெண்டு அந்த பார்சலை வீட்டு வாசலில் வைத்துச் சென்று இருக்கிறார். இருப்பினும், பார்சலை சிறந்த பார்த்த போது துளசிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதில் உயிரிழந்த நிலையில், ஒருவரின் சடலம் இருந்ததைப் பார்த்து துளரி அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போய்விட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களும் இதைப் பார்த்து பீதி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அத்னான் நயீம் அஸ்மி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருக்கிறார். போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்த போது அந்த பார்சலில் டெல்லர் ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரூ. 1.30 கோடி தங்களுக்குத் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் குடும்பத்தினர் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. முதற்கட்டமாக அந்த பார்சலை டெலிவரி செய்த நபரை போலீசார் அடையாளம் காண முயன்று வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இப்போது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னரே, அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Post