இஸ்லாம் பெண்கள் பற்றி.. நாங்க அந்த அர்த்தத்துல சொல்லல.. மன்னிப்பு கேட்டு விளக்கிய

post-img

சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த அடுத்த கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரூபினா மற்றும் ரூபிஸீனா என்ற இரட்டையர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில இஸ்லாம் பெண்களின் நிலமை பற்றி பேசி இருக்கிறார்கள்.
அது குறித்து பல பேர் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் தாங்கள் பேசியது தவறு என்றும் ஆனால் நாங்கள் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்றும் ரூபினா மற்றும் ரூபிஸீனா விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
அதோடு அன்று அந்த பேட்டி கொடுக்கும்போது என்ன நடந்தது என்பது பற்றியும் அதில் விளக்கி இருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் நடுவர்களாக இருந்து அடுத்த கதாநாயகி என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பல பேர் கலந்து கொண்டிருந்த நிலையில் கடைசியில் இரட்டையர்களான ரூபினா மற்றும் ரூபிஸீனா இருவரும் டைட்டிலை வென்றனர்.
அதைத் தொடர்ந்து இவர்கள் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.அதுபோல துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்களாம். அந்த திரைப்படத்திற்கான பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் நடிகரும் பத்திரிக்கையாளருமாக இருக்கும் பயில்வான்," இஸ்லாத்தில் கலை கலாச்சாரம் போன்றவற்றில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று இருக்கிறதே, நீங்கள் குர்ஆன் எல்லாம் படிக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழா தமிழாவை விடுங்க.. பிக் பாஸில் பவா செல்லத்துரை முதல் நாள் செய்தது சரியா? கரு. பழனியப்பன் கேள்வி

A post shared by Rubeena Rubiseena (@rubi_rubisee)

அதற்கு பதில் அளித்த ரூபினா கலைக்கு ஜாதி, மத வேறுபாடு கிடையாது. அதை நாங்கள் சரியாக செய்தால் அதில் எந்த தவறும் கிடையாது. எங்களுடைய திறமையை நாங்கள் வெளிக்காட்ட நினைத்தோம். பெரும்பாலும் இஸ்லாம் மதத்தில் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று நிறைய பேர் அடக்கி வைத்துள்ளார்கள். அதிலிருந்து கொஞ்சம் வெளியில் வர நினைத்தோம். இது எங்களுக்கு பிடித்திருக்கிறது. இது எங்களுடைய விருப்பம்.
எங்களுடைய பெற்றோர்களும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இது எங்கள் வாழ்க்கை நாங்கள் எங்களுக்காக வாழ்கிறோம் என்று பேசி இருக்கிறார்.இவர்களின் இந்த கருத்தை தொடர்ந்து இஸ்லாம் மதத்தில் பெண்களை அடக்கி வைக்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம்? என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் வீடியோ ஒன்றில் ரூபினா மற்றும் ரூபிஸீனா இருவரும் பேசி இருக்கின்றனர்.
ஜி.பி முத்துவின் அடுத்த அவதாரம்.. ரத்தம் சொட்ட.. கண் கலங்க வைக்கும் போஸ்டர்.. குவியும் வாழ்த்து
அதில் அன்று எங்கள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதற்காகத்தான் நாங்கள் அவரைப் பார்க்க போயிருந்தோம். அந்த நேரத்தில் அங்கே திடீரென்று பிரஸ்மீட் என்று சொல்லிவிட்டார்கள் நாங்கள் சாதாரண உடைவில் தான் வீட்டில் எப்படி இருப்போமோ அப்படியே அதில் கலந்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் எங்களிடம் அந்த நபர் அதட்டுவது போன்று கேள்வி கேட்டார்.
எங்கள் வீட்டில் அப்படி யாருமே எங்களை மிரட்டியது கிடையாது. அதனாலேயே அவர் கேள்வி கேட்கும் போது நாங்கள் பயந்துவிட்டோம். அப்போது என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் நாங்கள் பேசிவிட்டோம். ஆனால் அதற்குப் பிறகு நான் பேசியது எவ்வளவு தவறு என்று புரிந்து கொண்டேன். இஸ்லாம் மதத்தில் அடுத்த மார்க்கத்தை பற்றி தவறாக பேசக்கூடாது என்று இருக்கும்போது நான் எப்படி என்னுடைய மார்க்கத்தையே தவறாக பேசுவேன்.
பெண்களை அடக்கி வைக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னது சிலர்தான் அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னேன். இஸ்லாத்தில் அப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் நாங்கள் பேசிய வார்த்தை தவறாகிவிட்டது. அதற்காக உண்மையில் நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோல நான் பேசிய வார்த்தைகள் உங்களுக்கும் மனதை கஷ்டப்படுத்தி இருந்தால் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் கண்ணீரோடு பேசி இருக்கிறார்கள்.

 

Related Post