சென்னை: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 3 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளிக்கும் பேட்டிகள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தில், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளை நான் அதிபர் ஆனதும் அமெரிக்காவுடன் இணைக்க பணிகளை செய்வேன் என்று கூறி உள்ளார். அதோடு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட டிரம்ப் அதைப் பற்றி கேலி செய்த கனடா கேலியாக பற்றி பேசி உள்ளார். ஆனால் அவர் கேலியாக பேசினாலும்.. கனடாவில் ஆட்சி கவிழும் சூழல் இருப்பதால் எதிர்காலத்தில் இது சாத்தியம் ஆகுமோ என்ற எண்ணம் தோன்றி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஏன் 10 கோடி டாலருக்கு கனடாவிற்கு உதவ வேண்டும். அவர்கள் வறுமையை நோக்கி செல்கிறார்கள். கனடாவிடம் சொந்த நாட்டு பாதுகாப்பிற்கு பணம் இல்லை. இது எல்லாம் சரியாக ஒரு வழி இருக்கிறது. கனடா அமெரிக்காவின் ஒரு அங்கம் ஆகலாம். 50 மாகாணங்கள் உள்ளன.. இதில் 51வது மாகாணமாக கனடா மாறலாம். அவர்களுக்கு பாதுகாப்பு செலவு இருக்காது.. மற்ற செலவுகளும் குறையும். அதோடு வேகமாக வளரவும் முடியும் என்று கூறி இருந்தார்.
கனடாவை அமெரிக்காவுடன் ஒருங்கிணைப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று தான் கருதுவதாகக் கூறினார்.
கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ட்ரூடோ ஏப்ரல் மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்ய 80% வாய்ப்பு உள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கனடிய தலைவர்கள் மற்றும் அவரது சொந்த கட்சியினரிடையே கருத்துக்கள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன.
ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறாராம். ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த சில வாரங்களில் இதனால் ஜஸ்டின் ராஜினாமா செய்யலாம்.
கனடாவின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், நாட்டின் எதிர்காலம் குறித்து ட்ரூடோவுடன் ஆலோசனை செய்ததில்.. ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், நிதி நிலைமையில் நிலவும் சிக்கல்கள் காரணமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில், ட்ரூடோ மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார்.
இந்தியாவுடன் மோதல்: ஏற்கனவே இந்தியாவுடன் ஐஸ்டின் ட்ரூடோ மோதிய நிலையில்.. தற்போது அவரின் பதவிக்கே சிக்கலாகி உள்ளது.கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார்.
அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.