திருச்சி, கோவை, தூத்துக்குடிக்கு குட் நியூஸ்! அடுத்தடுத்து வந்த ஆச்சர்ய நியூஸ்! நம்ம தமிழ்நாடா இது!

post-img
சென்னை: தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் மற்றும் நிறுவனங்களை கொண்டு வர தொழில் நிறுவனங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடு என்றால் அது சென்னையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த முதலீடுகள் சென்னை தாண்டி மற்ற நகரங்களுக்கும் செல்ல தொடங்கி உள்ளது. இப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் பிரித்து விடப்படுகின்றன. உதாரணமாக விண்பாஸ்ட் தூத்துக்குடிக்கு சென்றது, காலனி தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை சென்றது, ஓசூருக்கு மின்னணு தொழிற்சாலைகள் சென்றது என்று முதலீடுகள் பரவலாக்கப்பட்டு வருகின்றன. சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது. இதற்கான தொழிற்சாலை சென்னையில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கானின் ஆலை அருகே கட்டப்படும். மிக விரைவில்.. கூடி சீக்கிரம் அங்கே உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன. தூத்துக்குடி, ஓசூர், கோவை அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க தொடங்கி உள்ளன. பெரிதும் வளராத அரியலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு முதலீடுகள் குவிந்து உள்ளன. அரியலூர் போன்ற பெருமளவில் பின்தங்கிய மாவட்டத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. வியட்நாமைச் சேர்ந்த ஷூ உற்பத்தியாளர் "ஃப்ரீடிரெண்ட்" 1,000 கோடி செலவில் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது . Freetrend Industrial India Pvt. லிமிடெட் அரியலூர், கிராண்ட் அட்லாண்டியா பனப்பாக்கம் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட். லிமிடெட். ராணிப்பேட்டை, கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் காஞ்சிபுரம், அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட். லிமிடெட் கிருஷ்ணகிரி, லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட். லிமிடெட் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், டேப்லெட்ஸ் இந்தியா லிமிடெட் செங்கல்பட்டு, விஸ்டியன் குழுமம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், லூகாஸ் டிவிஎஸ் குரூப் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, Nokia Solutions & Networks India Pvt. லிமிடெட். காஞ்சிபுரம், ராக்வெல் குரூப் 12 சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் பிரைவேட். லிமிடெட். காஞ்சிபுரம், சூப்பர் ஆட்டோ செங்கல்பட்டு, காஞ்சிபுரம், Yuzhan Technology (India) Pvt. லிமிடெட். காஞ்சிபுரம், டாடா மோட்டார்ஸ் லிமிடெட். ராணிப்பேட்டை ஆகிய முதலீடுகள் சமீபத்தில் கவனிக்கப்பட்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் தென் தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் மற்றும் நிறுவனங்களை கொண்டு வர தொழில் நிறுவனங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களில் 40% வரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் 35% பங்களிக்கும் எலக்ட்ரானிக் சூப்பர் பவர் ஆகும். உதாரணமாக மின்னணு சாதன துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 ஆக நீடித்து வருகிறது. நவம்பர் 2024 இல் தமிழ்நாடு $1.53 பில்லியன் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 8 மாதங்களுக்கு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் அதிக மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி செய்த முன்னணி மாநிலங்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. 1. தமிழ்நாடு - $ 7.82 பில்லியன் (38%) 2. கர்நாடகா - $ 4.14 பில்லியன் (20%) 3. உத்தரப் பிரதேசம் - $3.46 பில்லியன் (17%) இதை மேலும் பெரிதாக்கும் விதமாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் முதலீடுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

Related Post