அண்ணா பல்கலைக்கழக சம்பவம்: தனிப்பட்ட முறையில் மாணவி பாதிக்கப்பட்டதை அரசியலாக்க முயற்சி.. அமைச்சர்

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கமளித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெகுவிரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அரசியல் ஆக்க முயற்சி செய்கிறார்கள் என்று கூறியுள்ள கோவி செழியன், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கவே அஞ்சினர் என்றும் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் குமரியை சேர்ந்த மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் அதனை வீடியோவாக எடுத்ததாகவும் மாணவி மற்றும் அவரது காதலர் சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்து. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சென்னை கோட்டூர்புரம் போலீசார், சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷும் விளக்கம் அளித்து இருந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெகுவிரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- சென்னை கிண்டி மருத்துவமனை மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளார். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி இது போன்ற ஒரு சம்பவம் நிகழாதவாறு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெகுவிரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தனிப்பட்ட முறையில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை சிலர் அரசியல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கவே அஞ்சினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post