பத்தாம் வகுப்பு பாஸா..? உங்களுக்கு மத்திய அரசின் பணி வாய்ப்பு...!

post-img

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.56,900 ஊதியத்தில் வேலை...!

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Institute Of Technical Teachers Training And Research or NITTTR) தூய்மையை பராமரித்தல், ஆவண பரிமாற்றம், ஆவண பாதுகாப்பு, மெயில் அனுப்புதல், ஜெராக்ஸ் எடுத்தல், அலுவலகத்தில் தினமும் நடக்கும் பணிக்கான டைரியை பராமரித்தல் உள்ளிட்ட பிற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி விவரம்:

v மெயில் அனுப்புதல்

v தூய்மை பணி

v ஆவண பரிமாற்றம்

v ஆவண பாதுகாப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.07.2023

பணியிடங்கள் எண்ணிக்கை:

34 பணியிட விவரங்கள் குறித்த முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

கல்வித்தகுதி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓராண்டு அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்புகளை முடித்திருக்க வேண்டும். பணி சார்ந்த கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.

Ø அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டும்.

Ø குறைந்தபட்ச தகுதிகளாக, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை விண்ணப்பதாரர்கள் கொண்டிருத்தல் அவசியம் ஆகும். ஊதிய விவரம்

Ø மாத ஊதியம்- Rs.18,000-56,900(நிலை -1) வயது வரம்பு

Ø விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் வேண்டும்.

Ø வயது வரம்பு சலுகை குறித்த விவரங்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ø தகுதி, விருப்பம் உள்ளவர்கள் https://www.nitttrc.ac.in/  இணையதளம் மூலம் ஜூலை மாதம் 17 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

Ø நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை +91 94451 41467, 044 22545436 என்ற எண்கள் அல்லது மின்னஞ்சல் nitttrcadmin@nitttrc.edu.in வாயிலாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்த பின், அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும். அந்த நகலுடன் சுய கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்த அனைத்து சான்றிதழ்களுடன் விரைவு தபால் அல்லது கூரியர் வாயிலாக, ஜூலை 31ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Ø விண்ணப்பங்களை அனுப்பும்போது கவரின் மீது ‛‛APPLICATION FOR THE POST OF Multi Tasking Staff'' என எழுதி, The Director, National Institute Of Technical Teachers Training and Research, Tharamani, Chennai - 600 113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Ø ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, ஜூலை 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.07.2023 அன்று மாலை 5.30 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும்.

Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மிஸ் பண்ணிடாதீங்க...!

Related Post