ராகு கேது பெயர்ச்சி பலன்: மாற்றம் ஒன்றே மாறாதது. புதிய நம்பிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. பிறக்கவுள்ள 2025 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2025 ஆம் ஆண்டில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். மே 14 ம் தேதி குரு பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. இது அரிதிலும் அரிதாக நடைபெறும் நிகழ்வு. இதில் ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்... (Rahu ketu peyarchi 2025)
பொதுவாக ராகுவைப் போல கெடுப்பாரும் இல்லை, கேது போல கொடுப்பார் இல்லை என்று சொல்வார்கள். சாலை விபத்துகளுக்கு ராகுவின் பெயர்ச்சியும் முக்கிய காரணமாக இருக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. வண்டி வாகனம், கணவன் - மனைவி உறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு ராகு பிராதனமாக இருப்பார். ராகு - கேது பெயர்ச்சியால் பின்வரும் ராசிகள் 2025 ஆம் ஆண்டு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பக்க்க
மிதுனம் (Rahu ketu peyarchi for midhunam): பொதுவாக ராகு ஒன்பதாவது இடத்தில் வரக்கூடாது. அப்படி வரும்போது அப்பாவின் உடல்நலம் கடுமையாக பாதிக்கும். மிதுனம் ராசிக்கு ராகு ஒன்பதாவது இடத்தில் வருகிறார். அப்பாவுக்கு மோசமான நேரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மாவை சுமங்கலி பூஜை செய்ய சொல்லலாம். மாரியம்மன், காளி கோயில்களில் பூஜை செய்து சுமங்கலிகளுக்கு தானம் வழங்கலாம்.
கடகம் (Rahu ketu peyarchi for kadagam): கடகம் ராசி இப்போதுதான் ஏழரை சனியில் இருந்து விடுபட்டது. அதற்குள் ராகுவால் அபாயம் வரவுள்ளது. ராகு எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். வாகனத்தில் மிகுந்த கவனம் தேவை. வண்டியில் சாகசம் செய்வதற்கு ஆர்வம் காட்டும் நபர்கள், முடிந்தவரை வண்டியை தொடாமல் இருப்பது நல்லது. எட்டாம் இடத்துக்கு ராகு வருவது சில சமயம் ஆயுளுக்கே கண்டமாக அமையவும் வாய்ப்புள்ளது. எனவே இது மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் .
சிம்மம் (Rahu ketu peyarchi for Simmam): சிம்மம் ராசிக்கு ராகு ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். பொதுவாக ராகு ஏழாம் இடத்துக்கு வரும்போது ஆண் - பெண் உறவில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கணவன் - மனைவிக்குள் பிரச்னையாகி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, அந்த சிந்தனைகளை முழுவதுமாக தவிர்த்துவிடுவது நல்லது.
விருச்சிகம் (Rahu ketu peyarchi for viruchigam): விருச்சிகம் ராசிக்கு ராகு நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். கணவன் - மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். தேவையில்லாத சந்தேகம் ஏற்பட்டு உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. சிறிய கவனக்குறைவு உங்கள் குடும்பத்தையே பிரிக்குமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
கும்பம் (Rahu ketu peyarchi for kumbam): கும்பம் ராசிக்கு ராசியிலேயே ராகு பெயர்ச்சி ஆகவுள்ளார். உடலிலேயே பாம்பு இருப்பது போல மனக் குழப்பம் ஏற்படும். மதுபழக்கம் உள்ளிட்டவற்றால் தேவையில்லாத சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மீனம் (Rahu ketu peyarchi for meenam): மற்றவர்களுக்கு அதிகம் சிபாரிசு செய்து, உங்களுக்கு தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும். நீங்கள் சிபாரிசு செய்பவர்கள் செய்கின்ற தவறுகளுக்காக நீங்கள் இழப்பீடு செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். அதனால் தேவையில்லாமல் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.