மோகன்பாபுவுக்கு முன்ஜாமீன் கொடுத்தா தப்பிச்சி துபாய் போய்டுவாரு! கோர்ட்டில் போலீஸார் எதிர்ப்பு

post-img
ஹைதராபாத்: பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் நடிகர் மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீஸார் எந்த காரணத்தை சொன்னார்கள் என்பதை பார்க்கலாம். மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் அவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அந்த அளவுக்கு நட்பு! மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்ற இரு மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் அவருடைய மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் இடைய சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் இருவரும் மாறி மாறி போலீஸில் புகார் தெரிவித்துக் கொண்டனர். இந்த சூழலில் கடந்த புதன்கிழமை அதாவது 11 ஆம் தேதி மனோஜ், மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால் மோகன் பாபு வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அதை தடுத்து நிறுத்தினர். அப்போது இதை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை மைக்கை வைத்து மோகன் பாபு தாக்கினார். இதில் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெலுங்கானா பத்திரிகையாளர் சங்கம் போலீஸில் புகார் அளித்தது. இதையடுத்து நடிகர் மோகன் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி வரும் மோகன்பாபு, வழக்கு விசாரணைக்கு வரும் வரை தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர் துபாய் சென்றுவிடுவார் என காவல் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோகன்பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்க தெலுங்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோகன் பாபு 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் மஞ்சு பக்தவத்சலம் நாயுடு. இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவர் சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் பிடி வாத்தியாராக பணியை தொடங்கினார். இவர் நகைச்சுவை, வில்லன், ஹீரோ உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Related Post