தமிழ்நாடு ஐடி க்கு பொற்காலம்.. பிடிஆர் மேஜிக்..கர்நாடகா, தெலுங்கானாவுக்கு செக்..!

post-img

தமிழ்நாட்டில் வர்த்தக வளர்ச்சிக்காக ஸ்டார்ட்அப் மற்றும் பின்டெக் துறை நிறுவனங்களை ஈர்க்க பல முக்கிய கொள்கைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல முக்கியமான பின்டெக் மற்றும் டெக் பிராடெக்ட் சேவை நிறுவனங்கள் சென்னையில் அலுவலகத்தை திறந்துள்ளது. 

இந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப சேவை பிரிவில் கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா ஆகியவை உடன் தமிழ்நாடும் சிறந்து விளங்கினாலும் முன்னணி மாநிலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஸ்டார்ட்அப் துறையை எடுத்துக்கொண்டால் கர்நாடகா முதல் இடத்தில் டெல்லி - NCR முதலிடத்தை நெருங்கி வருகிறது.

இதேவேளையில் டெக் முதலீட்டு சந்தை மோசமான நிலையில் தற்போது இருக்கும் காரணத்தால், அடுத்த சில காலாண்டில் இத்துறை பெரிய அளவில் மேம்படும் என கணிப்புகள் நம்பிக்கை கொடுக்கும் வேளையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சராக பிடிஆர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் நிதியியல் நிலையை முந்தைய ஆட்சி காலத்தில் மிகவும் மோசமாக இருந்த நிலையில் மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் பெரிய அளவில் மேம்படுத்திய பழனிவேல் தியாகராஜன் அவருடைய மேஜிக்-ஐ ஐடி துறையிலும் காட்டுவாரா..? தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஐடி துறை வளர்ச்சிக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேனோ டைடல் பார்க் திட்டம் முதல் ஐடி மற்றும் டெக் நிறுவனங்களை ஈர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், இத்துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இவருடைய நியமனம் மூலம் ஐடி துறையில் தற்போது பெரும் அளவிலான வர்த்தகத்தை பெற்று வரும் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. புதிய நிறுவனங்களை ஈர்ப்பதும், புதிய வேலைவாய்ப்புகளை ஐடி துறையில் உருவாக்குவது தான் இத்துறையில் முக்கிய இலக்காக பிடிஆர் கொண்டுள்ளார்.

TN's revenue deficit reduced by Rs 16k crore: PTR- The New Indian Express

புதிய பதவி குறித்து பிடிஆர் அவருடைய டிவிட்டரில் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப துறையை தனக்கு வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.   கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஐடி துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்ட முடியவில்லை என தெரிவித்துள்ளார். எனவே ஐடி துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் பிடிஆர் தான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் உலகளாவிய நிறுவனத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் தான் பெற்ற சொந்த அனுபவமும், தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். உலக நாடுகளின் பொருளாதாரம் டெக்னாலஜி அடிப்படையாக கொண்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியாவும் டெக் நிறுவனங்களுக்கும், டெக் முதலீடுகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் நிதிநிலை, கடன், முதலீட்டுக்கு போதுமான நிதி திரட்டல், தனி நபர் வருமானம், GSDP-யில் வளர்ச்சி என பல அடிப்படை விஷயங்களில் கடந்த 2 வருடத்தில் தமிழ்நாட்டின் நிலைமை மேம்பட்டதில் முக்கியப் பங்கு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழ்நாட்டு அரசின் வருவாய் அதிகரிப்பதில் சிறப்பான பணிகளைச் செய்தது மட்டும் அல்லாமல் நிதி நிர்வாகத்திலும், செயல்திறன் கண்காணிப்பிலும் பல மாற்றங்களை அடித்தளத்தில் கொண்டு வந்தது மூலம் துறை வாரியாகச் செயல்திறனைக் கண்டறிந்து தேவையான பிரிவுகளுக்கு மேம்பட்ட முறையில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான நிர்வாகம். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக மட்டுமே இருந்த நிலையில் 2022 டிசம்பர் மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் கூடுதல் பொறுப்புகளாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலன், புள்ளியியல் துறைகள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த துறைகளில் இருந்து மொத்தமாக விடுவிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2 வருடத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கும் வியக்கும் வகையில் பல முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசி பாராட்டுகளை பெற்றார். குறிப்பாக மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

 

Related Post