டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப லோக்சபாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜகவின் 20 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என 269 எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்தனர். லோக்சபாவில் பாஜக அணிக்கு 298 எம்பிக்கள் ஆதரவு இருக்கும் நிலையில் 269 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதனையடுத்து நேற்று பாஜக கொறடா உத்தரவை மீறி லோக்சபாவுக்கு வருகை தராத 20 எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.