திருநெல்வேலி: நெல்லையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் நீதிமன்ற வாசலில் கொடூரமாகக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த வழக்கறிஞர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கியுள்ளார். இந்த நிலையில் மாயாண்டியை கொலை கும்பல் வெட்டிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சாந்தி நகர் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கறிஞர்கள் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.
அப்போது வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகிவிடு வந்த இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், சிறுது நேரத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
நெல்லை கொலை: இந்நிலையில், இளைஞரை கொன்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிய நிலையில் ஒருவரை வழக்கறிஞர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர், கீழநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பதும், கொலை வழக்கில் ஆஜராக வந்தவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில்நீதிமன்ற வாயிலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வழக்கறிஞர் பேட்டி: இந்நிலையில் கொலை எப்படி நடந்தது? என்பது குறித்து அதனை நேரில் பார்த்தவர் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய வழக்கறிஞரான கார்த்தி என்பவர்," நெல்லை நீதிமன்றத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாங்கள் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு வாசலில் சக வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மற்றொரு வழக்கில் ஆஜரான மாயாண்டி வெளியே வந்தார். அப்போது வேகமாக கார் ஒன்று வந்து நின்றது.
சுற்றி வளைத்து தாக்குதல்: அதிலிருந்து நான்கைந்து பேர் திடீரென இறங்கி மாயாண்டியை நோக்கி ஓடிவந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவர்களிடம் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அங்கு வந்த கொலை கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்து ஓடினர். இந்த நிலையில் கொலையை பார்த்த நாங்களும் கொலையாளிகளை பிடிக்க முயன்றோம். மேலும் நீதி மன்றத்தில் பிற போலீசாரும் இருந்த நிலையில் அவர்களால் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை.
கொலை காட்சிகள்: காரில் குற்றவாளிகள் ஏறி நான்கைந்து பேர் தப்பினர். அவற்றில் ஒருவனை மட்டும் நாங்கள் பிடித்தோம். எங்களோடு இருந்த உதவி ஆய்வாளர் ஒரு குற்றவாளியை மடக்கிப் பிடித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை. கொலையாளிகள் மாயாண்டியை சரமாரியாக வெட்டினர். அவர் செத்துப் போனதை உறுதி செய்த பிறகும் கொடூரமாக வெட்டிக் கொண்டே இருந்தனர். அதற்குப் பிறகு மக்கள் கூடுவதை அறிந்து அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். என்றார். இந்த நிலையில் மாயாண்டியை கொலை கும்பல் வெட்டிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.