கணவர் வாக்கிங் போன நேரத்தில் ஈரோடு அரசு பள்ளி ஆசிரியை கொலை..

post-img

ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (53). இவர் அரசு பள்லியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மனோகரன் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அது போல் கடந்த 20ஆம் தேதி மனோகரன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது மனைவி புவனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து மனோகரன் அதிர்ச்சி அடைந்து கத்தியுள்ளார். இதுகுறித்து தலவறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு போய் ஆய்வு நடத்தினர்.


அதில் புவனேஸ்வரி அணிந்திருந்த நகைகள் மாயமான நிலையில் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் புவனேஸ்வரி வீட்டின் மேல் மாடியில் வாடகைக்குக் குடியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் பல்ராமிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை.. மற்றொரு ஆசிரியை கணவர் பரபரப்பு வாக்குமூலம்
இதில் பல்ராமுடன் பணியாற்றும் ஆசிரியரின் கணவரான பெரியசடையம்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெயக்குமார் அடிக்கடி புவனேஸ்வரியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

 


ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தில் ஆசிரியை புவனேஸ்வரியின் வீட்டின் மேல் பகுதியில் பல்ராம் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். பல்ராமின் மனைவியும் கார் ஓட்டுநர் ஜெயக்குமாரின் மனைவியும் தனியார் பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகிறார்கள். இந்த பழக்கத்தின் பேரில் பல்ராமுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே பணத்தகராறு இருந்து வவந்துள்ளது.
இதனால் புவனேஸ்வரியின் வீட்டின் மாடியில் இருந்த பல்ராமின் வீட்டிற்கு ஜெயக்குமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது ஆசிரியை புவனேஸ்வரிடம் அதிக அளவு நகை, பணம் இருப்பதை ஜெயக்குமார் அறிந்து கொண்டு அதை கொள்ளையடிக்க திட்டமிட்டார். இதையடுத்து அவர்களது வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை நோட்டமிட்டுள்ளார்.

 


அதில் மனோகரன் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தார். சம்பவத்தினத்தன்று மனோகரன் நடைப்பயிற்சிக்கு சென்ற நிலையில் வீட்டிற்குள் நுழைந்த ஜெயக்குமார், படுக்கை அறையில் இருந்த அலமாரியை திறக்க முயன்றார். அதில் தூங்கிக் கொண்டிருந்த புவனேஸ்வரி சப்தம் கேட்டு எழுந்து ஜெயக்குமாரை பார்த்து கூச்சலிட்டார்.
இதனால் பயந்த ஜெயக்குமார், புவனேஸ்வரியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மட்டும் திருடிச் சென்றார். இதையடுத்து ஜெயக்குமாரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

 

Related Post