சென்னையில் மீண்டும் அதிர்ச்சி... மின்சார ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு...

post-img

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.30 மணியளவில் புறநகர் மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. பேசின்பிரிட்ஜ் அருகே சென்ற போது மின்சார ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.

இதையடுத்து ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பினர். மின்சார ரயிலின் ஒரு பெட்டி தடம்புரண்டதால் பிற ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

 

 

Related Post