ஜெயிலு பயத்தை காட்டுது காங்.. பதறும் பாஜக-கர்நாடகாவில் 40%

post-img

பெங்களூர்: கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் அரசு பணி ஒப்பந்ததாரர்களிடம் 40% கமிஷன் லஞ்சமாக பெற்றது தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு.


கர்நாடகா மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் 40% லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பதவியே காவு கொள்ளப்பட்டது.


கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் ஆயுதமாகவும் 40% கமிஷன் விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. கர்நாடகா மாநிலத்தின் பட்டி தொட்டி எங்கும் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை முகத்தின் மீது கியூ ஆர் கோட் வரைந்து தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்தது காங்கிரஸ். இதனாலேயே பாஜக ஆட்சி வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் அரியணை ஏறிவிட்டது.


ஆனாலும் 40% கமிஷன் விவகாரத்தை காங்கிரஸ் கைவிடுவதாக இல்லை. தென்னிந்திய மாநிலங்களிலேயே கர்நாடகாவில் 20க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்பது பாஜகவின் லோக்சபா தேர்தல் கணக்கு. இதற்கு ஆப்படிக்கும் வகையில் 40% கமிஷன் தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது கர்நாடகா காங்கிரஸ் அரசு.


தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் பொதுப் பணித் துறை, நகர்ப்புற மேம்பாடு, நீர்வளத்துறை, சிறு நீர்ப்பாசனம் மற்றும் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளில் 40% கமிஷன் பெறப்பட்டது தொடர்பாக நீதிபதி நாகமோகன் தாஸ் கமிஷன் விசாரணை நடத்தும். இந்த விசாரணை கமிஷன் 30 நாட்களில் ஜரூராக விசாரணை நடத்தி 3 மாதங்களில் தமது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா பாஜக தலைவர்கள் ஜெயில் அச்சத்தால் உறைந்து போயுள்ளனராம்.


சீக்கிரமாக சிக்கப் போவது யாரு?
ஜஸ்ட் 2% ஓட்டு தான் மிஸ்! லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் ‛இந்தியா’ கூட்டணி? - கருத்து கணிப்பு

 

Related Post