கோர விமான விபத்தில் உயிர் தப்பிய 11 வயது சிறுவன்.. 42 பேர் பலியானதாக கஜகஸ்தான் அரசு தகவல்!

post-img
அக்தா: கஜகஸ்தான் நாட்டின் அக்தா நகரில் இன்று நடந்த விமான விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்துள்ளனர். 11 வயது சிறுவன், 16 வயது இளம்பெண் உள்ளிட்ட 22 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கஜகஸ்தான் நாட்டின் அக்தா நகரில் 67 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் சென்ற நிலையில், அக்டாவ் நகருக்கு அருகே தீப்பிடித்தது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கஜகஸ்தானின் எமர்ஜென்சி கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள். ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில பயணிகளும் அதில் இருந்துள்ளனர். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து இன்று காலை இந்திய நேரப்படி 9.25 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் இந்திய நேரப்படி இன்று காலை 11.58 மணியளவில் அக்தா நகரம் அருகே விபத்துக்குள்ளானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக பறவைக் கூட்டத்தின் மீது மோதியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் லாண்டிங் கியர் கீழே உள்ளபடி அதிவேகமாக தரை இறங்க முயல்வதாக ஒரு வீடியோ வெளியானது. தரையிறங்க முயற்சிப்பது போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய கஜகஸ்தான், அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளுமே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. விமான விபத்து ஏற்பட்ட பகுதியில் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கி தற்போது வரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் தப்பியவர்கள், காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் 11 வயது சிறுவன், 16 வயது இளம்பெண் ஆகியோரும் உள்ளனர். அவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post