சாப்பாடு விஷயத்தில் கோதையிடம் வெறுப்பை காட்டும் தமிழ்..

post-img

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் கோதை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக தமிழ் வீட்டில் இருந்து சாப்பிடும் போது தமிழ் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார்.
இதை எதிர்பார்க்காத சரஸ்வதி ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல்: கௌதமால் கதிருக்கு வரும் பிரச்சனை.. சந்தோஷத்தில் ஈஸ்வரி.. கழட்டிவிட்ட அப்பத்தா
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்தடுத்த பல எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. பல நாட்களாக வெளியே தெரியாத ரகசியங்களும் இப்போதுதான் மொத்த குடும்பங்களுக்கும் தெரிந்திருக்கிறது. அர்ஜுன் யார் எதற்காக ராகினியை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்குள் வந்தார் என்ற உண்மை கோதை குடும்பத்திற்கு இப்போது தெரிய வந்திருக்கிறது.
அதே நேரத்தில் கோதையின் சொத்துக்கள் மொத்தத்தையும் ராகினியின் பெயரில் ஏமாற்றி எழுதிவிட்ட அர்ஜுன் பற்றி ஏற்கனவே ராகினிக்கு தெரிந்தும் ராகினியும் சேர்ந்து தான் இந்த துரோகத்தை செய்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட கோதை அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
ஏற்கனவே அர்ஜுனனின் பேச்சை நம்பி தமிழை வீட்டை விட்டு வெளியே துரத்திய கோதைக்காக, தன்னுடைய அம்மா தற்போது வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார் என்பதை தெரிந்த தமிழ் அர்ஜுனிடம் சென்று சண்டை போட்டு இருக்கிறார். அர்ஜுனனை அடித்து விட்டு என் கையால்தான் உனக்கு சாவு என்று ராகினி முன்பு சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் இப்ப வரைக்கும் ராகினிக்கு அர்ஜுன் பற்றிய முழு விவரமும் தெரியாமல் இருக்கும் நிலையில் இனி சீக்கிரமாக அந்த உண்மையும் உடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 கதறி அழுத கார்த்திக்.. தமிழ் வீட்டுக்கு போக மறுத்த கோதை.. அர்ஜுனின் புது நாடகம்..தமிழ் எடுத்த முடிவு
இந்த நிலையில் கோதை குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் இருந்த நிலையில் அங்கு வந்த தமிழ் மொத்த குடும்பத்தையும் இன்றைய எபிசொட்டில் தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இத்தனை பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்று கார்த்திக் அழுது கொண்டிருந்தபோது கூட கார்த்திக்கு தமிழ் சமாதானம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வரும் எபிசோடுக்கான ப்ரோமோ என்று வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் வீட்டில் மொத்த குடும்பமும் தரையில் சாப்பிட உட்காருகின்றனர். அப்போது நடேசன் கோதையிடம் பசங்க எல்லாம் சின்ன பிள்ளையா இருக்கும் போது உட்கார வச்சு நிலா சோறு கொடுப்பாளா, அதே மாதிரி இப்பவும் உன் கையால சாப்பாட்டை பிசஞ்சு எல்லாருக்கும் கொடு என்று சொல்ல, கோதை சாப்பாட்டை பிசஞ்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது சரஸ்வதி இப்போ எல்லாரும் ஒன்னா இருக்கோம் அத்தை அதுவே மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க, கோதை தமிழின் கையில் சாப்பாடு கொடுக்க கை நீட்டுகிறார். ஆனால் தமிழ் சாப்பாடு வாங்காமல் அப்படியே யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு கிடைத்த அதிர்ச்சி.. பதறிப்போன கோபி..கோபத்தில் ஈஸ்வரி கேட்ட கேள்வி

Related Post