இந்திய பொருளாதாரத்தை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் வாயிலாக அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டு உள்ள வேளையில், இந்த வாய்ப்பை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக தென்னிந்திய மாநிலங்கள், அனைத்து துறையிலும் வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்க்க துவங்கியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் முன்னணி மூக்கு காண்ணாடிகளுக்கு பயன்படுத்தும் லென்ஸ் தயாரிப்பில் முன்னோடியான கார்ல் ஜெய்ஸ் இந்தியா, குறிப்பிடத்கக்க அளவிலான வர்த்தகத்தை கொண்டு இருக்கும் வேளையில் பெங்களூரில் புதிய முதலீட்டை செய்ய உள்ளது.
கார்ல் ஜெய்ஸ் புதிதாக கண்ணாடி லென்ஸ் தயாரிப்பு தளத்தை உருவாக்க சுமார் 250 மில்லியன் யூரோ அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதான் ஜெர்மனி நாட்டின் கார்ல் ஜெய்ஸ் நிறுவனத்தில் உலகளவில் பெரிய நிறுவனமாக இருக்கப்போகிறது. கார்ல் ஜெய்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை பெயர் 'விஷன்' பேக்டரி எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த முதலீட்டின் மூலம் ஜெய்ஸ் குழுமத்தின் வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்பதை காட்டியுள்ளது. இதை கார்ல் ஜெய்ஸ் நிர்வாக இயக்குனர் Miguel Gonzalez Diaz ஒரு முக்கிய பேட்டியிலும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான நிலத்தை பெங்களூரில் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த மாதம் இந்த மாபெரும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
பெங்களூரில் கட்டப்படும் புதிய தொழிற்சாலை 2024 அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு கார்ல் ஜெய்ஸ் சுமார் 1,800 கோடி ரூபாய் அளவிலான விற்பனையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கிறது. இப்புதிய தொழிற்சாலை மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் அதன் விற்பனையை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 25 வருடமாக இயங்கி வரும் கார்ல் ஜெய்ஸ் நிறுவனம் வெறும் 1400 ஊழியர்களை மட்டுமே கொண்டு இயங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய தொழிற்சாலைக்கான உற்பத்தி ஊழியர்கள், R&D பிரிவுக்கான ஊழியர்கள் என ஆகியவற்றை சேர்த்து 2000-த்தை தாண்டும் என கணிக்கப்படுகிறது.