சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் தூக்கிட்டு தற்கொலை..காரணம் என்ன?

post-img

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான குமரேஷ் பாபுவின் மகள் கிரா இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் குமரேஷ் பாபு. இவர் அதிமுக பொதுக்குழு வழக்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலஅபகரிப்பு வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.


நீதிபதி குமரேஷ் பாபு சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் பெயர் கிரா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தான் இன்று மாலையில் கிரா திடீரென்று தனது வீட்டு அறையில் தூக்கிட்டு கொண்டார்.


இதையடுத்து அவரது குடும்பத்தினர் வீட்டு கதவை உடைத்து அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


மேலும் சம்பவம் குறித்து அறிந்தவுடன் அபிராமபுரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நீதிபதி குமரேஷ் பாபுவின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தற்போதைய சூழலில் அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Post