சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை கனிகா ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவர் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சீரியலில் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருடன் நடித்தது பற்றி முதல் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தொகுப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், சீரியல் நடிகையாகவும் பன்முகத் திறமை கொண்ட கனிகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிப்பை தாண்டியும் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
கனிகா இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான திருவிளையாடல் புராணத்தில் தேவி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போதே இவருக்கு அதிகமான ரசிகர்கள் தோன்றி விட்டார்கள். இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வரலாறு திரைப்படத்தில் அஜித் ஜோடியாக நடித்த இவரா?? இப்போது சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் மனைவியாக நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி இருந்தனர்.
ஆனால் தற்போது இவருடைய கேரக்டர் பார்த்த ரசிகர்கள் பலர் சரியான முடிவு எடுத்திருப்பதாக கூறி வருகின்றனர். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் இவர் தான் டப்பிங் கொடுத்துள்ளார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் இவர் அதிகமாக வாய் திறந்து பேசவே இல்லையே என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர். அதைத்தான் சமூக வலைதளத்தில் இவரிடம் கேள்விகளாக கேட்டு வருகின்றனர். எப்போது நீங்கள் குணசேகரனை எதிர்த்து பேசுவீர்கள் என்று கேட்கும் கேள்விகளுக்கு சிரிப்பை மட்டும் பதிலளித்து இருக்கிறார்.
அதுபோல வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் காதலியாகவும், அவருடைய அம்மாவாகவும் இரண்டு கேரக்டரில் கனிகா நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அதிகமாக அம்மா கேரக்டர் தான் வரிசையாக வந்ததாம்.
அதுவும் தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகம் உள்ள நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். அஜித்தின் வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்ததால் அம்மாவாக நடித்தது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்டோருக்கு அம்மாவாக நடிப்பதற்காக வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் வரலாறு படம் தான். அந்த படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்காமல் போயிருந்தால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினி கதாபாத்திரம் தன்னை தேடி வந்திருக்கும் என்று சமீபத்தில் பேட்டியில் கனிகா பேசியிருக்கிறார். இதனால் அந்த மாதிரி வாய்ப்பு இருக்கு என்று நடிக்க கேட்டு வந்தவர்களை கூட சிலரை கனிஹா திட்டி அனுப்பி விட்டாராம். அதனால் தான் பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் இருந்திருக்கிறார். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இவருடைய பேட்டியை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலர் இப்ப மட்டும் 55 வயது உடைய குணசேகரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவிற்கு மனைவியாக நடிப்பது பெருசா தெரியலையா? ஆனால் அஜித்தின் வரலாறு படத்திற்கு அவருக்கு அம்மாவாக நடித்தது தான் பெருசா தெரியுதா? என்று சமூக வலைத்தளத்தில் கமெண்ட்களில் சிலர் திட்டி வருகிறார்கள்.