இலங்கையை கலக்கும் பொட்டா MGR; யார் இவர்? அவர் சொன்ன எம்.ஜி.ஆரின் ‘7’ ரகசியம்!

post-img
இலங்கை: கொழும்பு நகரத்தில் உள்ள ஒருவர் இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அவரைப் போலவே உடை அணிந்து அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். இவர் யார்? என்ன செய்கிறார்? தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை பற்றி விதவிதமான ஆயிரம் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அவரைப் போல ஆடை அணிந்து இப்போது அவரையே நினைத்து வாழ்ந்து வருபவர்கள் இருக்கிறார்கள். அரசியலில் கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் சிகப்பு எம்.ஜி.ஆர் என்று பட்டப்பெயர்கள் வைத்து அழைக்கும் அளவுக்கு இன்றும் அவரது புகழ் மறையாமல் இருக்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் தொலைக்காட்சிகளில் இப்போது வெளியாகின்றன. 'கிளாசிக் படங்கள்' என்ற தலைப்பு போட்டு அவரைக் கொண்டாடும் ஊடகங்கள் இருக்கின்றன. யூடியூபில் எம்.ஜி.ஆரைப் பற்றிய கதைகளைக் கேட்கும் மக்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போது என்ன நடந்தது? அவர் அமெரிக்காவில் சிகிச்சையிருந்த போது என்ன நடந்தது? என தலைப்பு போட்டு வெளியாகும் காணொளிகள் பொது மக்கள் இன்றைக்கு ஈர்த்து வருகிறது. அவர் மறைந்து 37 ஆண்டுகளாகிவிட்ட போது மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு மாலையும் கழுத்துமாக வரும் திருமண ஜோடிகளைப் பார்க்க முடிகிறது. அவரது சமாதியில் அவர் கட்டி இருந்த கடிகாரத்தின் ஓசை கேட்கிறதா? என காது வைத்துப் பார்க்கும் படித்த மக்கள் இப்போது இருப்பதைக் காண்கிறோம். ஆனால், அவரது புகழ் இந்தியாவைத் தாண்டி பக்கத்து நாடான இலங்கையில் கூட இன்றைக்கும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. இலங்கையில் எம்.ஜி.ஆரைப் போன்று உடை அணிந்து அவரது கடற்கரையில் பாடலை பாடிவருகிறார் இலங்கை எம்.ஜி.ஆர். அவரைப் போலவே சிகப்பு நிறத்தில் பேண்ட், கறுப்பு நிறக் கண்ணாடி, பஞ்சு மிட்டாய் கலரில் கோட் சூட் என்று வலம் வருகிறார். இவர் யார்? எப்படி அவருக்கு எம்.ஜி.ஆர் மீது காதல் வந்தது? இலங்கையில் வசித்துவரும் இவரை பெட்டா எம்.ஜி.ஆர். என்று மக்கள் அழைக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இவரது வீடியோக்கள் வைரல். கனடா, ஜப்பான், மலேசியா, உகாண்டா, ஆஸ்திரேலியா, நார்வே, பாரிஸ் என பல நாடுகளில் உள்ள தமிழர்கள் இவரை அறிவார்கள். தன்னைப் பற்றி பெட்டா எம்.ஜி.ஆர். பேசும் போது, "நாளை நமது நாடும் நமது என்று வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர் எங்கள் கண்டியில் பிறந்தவர். அதில் எனக்குப் பெருமை. என் உண்மையான பெயர் மாணிக்கம். உலக அளவில் என்னை பெட்டா எம்.ஜி.ஆர். என்பார்கள். எங்கள் ஊரில் என்னை மாணிக் பாட்சா என்பார்கள். நான் தனி ஆள். கூட யாரும் இல்லை. இருக்கும் வரை சந்தோஷமாக வாழவேண்டும். அதைத்தான் தலைவர் சொன்னார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பீச் பக்கம் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்க வருவேன்" என்கிறார். மேலும் இவர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விசயத்தைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். எம்.ஜி.ஆர் 1917 ஆம் ஆண்டு 17 ஆம் தேதி பிறந்தார். 1987இல் இறந்தார். அவரை எம்.ஆர். ராதா 1967இல் சுட்டார். ஆக, அவருக்கு ஏழுகள் வரிசையாகப் பொருந்திப் போகிறது என்கிறார். இதில் கூடுதலாக ஒரு விசயம் என்னவென்றால் எம்.ஜி.ஆரின் கார் எண்: 4777 என்பது. அதிலும் மூன்று ஏழு எண்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பெட்டா எம்.ஜி.ஆர் பேசும் பேசுவது முழுக்க பொன்மொழிகளாக உள்ளன. அத்தைதான் இன்றைய இளைஞர்கள் ரசிக்கின்றனர். தூர இருக்கும் விரோதியைவிட அருகில் உள்ள நண்பனிடம் எச்சரிக்கையாக இரு என்கிறது ஒரு சிங்கள பழமொழி என்கிறார். கூட்டா இருப்பது விசம். தனியாக இருப்பது சந்தோசம். இப்படிப் பல ஐட்டங்களை அள்ளிவிடுகிறார் பெட்டா. எம்.ஜி.ஆரின் பல பாடல்களை அப்படியே வரி மாறாமல் பாடுகிறார். அவரைப் போலவே தன்னை நினைத்துக் கொண்டு அவர் பாணியில் இன்றும் வாழ்ந்துவருகிறார் இவர். ஆகவே, இவரைப் பார்க்கும் இளைஞர்கள் கூட்டம் அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றார்கள். இவர் வருடம் முழுக்க கோட் சூட் தான் அணிவேன் என்கிறார். வேறு உடைகள் மீது விருப்பம் இல்லை என்றும் சொல்கிறார். இப்போது இவருக்கு 53 வயதாகிறது. ஆனால், மனதளவில் இன்றும் இளைமையாக இருக்கிறார். கொழும்பில் உள்ள பெட்டாவில் இருக்கும் பழைய டவுன் ஹால் சந்தையில் தினசரி கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சுருக்கமான சொன்னால் கைவண்டியில் மூட்டை இழுக்கிறார். அந்தக் கடின உழைப்பாளிக்குள் இருப்பது இளமையான இதயம். அதைக் கொடுத்தவர் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் என்கிறார் இவர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post