அவசரப்படாதீங்க இனிமே.. யோசிச்சு முடிவெடுங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அரசியல் நண்பர்கள்!

post-img

சென்னை: நடிகர் விஜய்க்கு அவருக்கு நெருக்கமான சில அரசியல் நண்பர்கள் அறிவுரை சொன்னதாக கூறப்படுகிறது. அவரின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து விஜயிடம் அவருக்கு நெருக்கமான சிலர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.. அதேபோல் நேரடியாக புயல் பாதித்த இடங்களை கூட பார்க்கவில்லை. ஏன் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை.

பெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும், என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டார். ஆனால் சம்பவ இடத்திற்கு விஜய் சென்று எந்த சந்திப்பும் மேற்கொள்ளவில்லை.

மோசமான செயல்: இதோடு நிற்காமல், நிவாரணம் வழங்குவதற்கு பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வர சொல்லி அங்கே வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். நான் போனால் கூட்டம் அதிகமாக வரும் அதனால்தான் போகவில்லை என்று சப்பை காரணம் ஒன்றும் இதற்கு கூறினார். பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் களத்தில் இறங்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். கூட்டத்தை சமாளிக்க வேண்டும். ஆனால் விஜய் அதை செய்யவில்லை.
முன்னதாக தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய் இரங்கல் அறிக்கையே தாமதமாக தந்தார். அவர்களின் குடும்பத்தாரை நேரில் கூட சென்று சந்திக்கவில்லை. அதேபோல் அவர்களுக்கும் கூட பனையூருக்கு அழைத்து நிவாரணம் கொடுத்தார்.
விஜயிடம் அவருக்கு நெருக்கமான சிலர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், பனையூர் கிட்டத்தட்ட விஜயின் கொடநாடு போல மாறிவிட்டது. அதை விட்டு வெளியே வராமல் விஜய் வீட்டிற்குள் முடங்கி கிடப்பது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கே சிக்கலாக மாறி உள்ளது என்று இணையத்தில் விமர்சனம் வைக்கிறார்கள்.

இதெல்லாம் நீங்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவு காரணமாக நடந்தது. இனிமேல் அவசரப்பட வேண்டாம். சில விஷயங்கள் நாம் நல்லதுக்கு செய்தாலும் கடைசியில் நமக்கே கூட எதிராக சென்று சேரும். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம், என்று அவருக்கு நெருக்கமான சில அரசியல் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதை விஜயும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நிவாரணம் விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோம்.. இனி கவனமாக இருக்க வேண்டும் என்று விஜய் தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிகிறது.

Related Post