வாட்ஸ் அப்பில் வந்த ‘கவர்ச்சி’ மெசேஜ்.. நம்பி சென்ற பயிற்சி போதகர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

post-img

நாகர்கோவில்: செல்போனுக்கு வந்த கவர்ச்சியான மெசேஜ் பார்த்து, அனுப்பியவர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற பயிற்சி மத போதகரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை 4 இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர். நாகர்கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் பயிற்சி போதகராக உள்ளார். 27 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. நாகர்கோவில் உள்ள ஒரு இறையியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் போதகரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் வந்துள்ளது. இவரும் தனது நண்பர்கள்தான் மெசேஜ் அனுப்புகின்றனர் என நினைத்துக் கொண்டு பதிலுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.


சிறிது நேரத்தில், கவர்ச்சிகரமான மெசேஜ் ஒன்றும் வந்துள்ளது. அதில் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்ததாம். இதனை நம்பி பயிற்சி போதகர் மயிலாடி புதூருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த ரஞ்சித் குமார் (வயது 20), பெருமாள் சுனில் (19 ), பிரதீப்( 20), அஜய் ( 20) ஆகியோர் பயிற்சி போதகரை மடக்கி பிடித்துள்ளனர்.


மேலும் தங்களிடம் இருந்த அரிவாளை காட்டி மிரட்டிய அந்த கும்பல், பயிற்சி போதகரிடம் இருந்த ரூ.2,800 மற்றும் செல்போனை பறித்தது. இதை யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டி அந்த கும்பல் அனுப்பியுள்ளது. பணத்தை பறிகொடுத்து ஏமாந்துபோன பயிற்சி போதகர் இது குறித்து அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.


விசாரணையில் மயிலாடி புதூரை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் அஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பயிற்சி போதகருக்கு கவர்ச்சி மெசேஜ் அனுப்பி அவரை தனியாக வரவழைத்து, பணம் மற்றும் செல்போனை 20 வயதே நிரம்பிய இளைஞர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் ஆர்வமின்றி ஒதுங்கும் இளைஞர்கள்! கல்வித்துறை கண்டிப்பாக இதை செய்யணும்! காங்கிரஸ் வேண்டுகோள்
முன் பின் தெரியாதவர்கள் கூறும் ஆசை வார்த்தை மற்றும் கவர்ச்சிகரமான மெசேஜ்களை நம்பி அவர்களை சந்திக்க செல்வதும் பணத்தை முதலீடு செய்வதும் பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கும் போலீசார், இதுபோன்ற முறைகேடுகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Related Post