கோரமண்டல் ரயில் விபத்து: ``ஒடிசா முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது”

post-img

கோரமண்டல் ரயில் விபத்து

`ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது’

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. NDRF குழு ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளது, மற்ற குழுக்களும் மீட்பு பணியில் சேர விரைந்துள்ளன. உயிரிழ்ந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றிருக்கிறார்.

``ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன்” பிரதமர் மோடி

 
கோரமண்டல் விரைவு ரயில் விபத்து

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து பிரதமர் மோடி, ``ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். அவர் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.” என வேதனை தெரிவித்திருக்கிறார்.

``அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது” - ஸ்டாலின்

 

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த கோர சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ``ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

Tamil News Live Today: கோரமண்டல் ரயில் விபத்து: ``ஒடிசா முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது” - முதல்வர் ஸ்டாலின்
 

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்.

உடனடியாக #Helpline உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்றிருக்கிறார்.

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது!

கொல்கத்தாவிலிருந்து பயணிகளுடன் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்திலுள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த விபத்தில் 7-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டு அவற்றில் பயணிகள் சிக்கியிருப்பதாகவும், பலர் இறந்திருக்கக் கூடும் எனவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தேடுதல் மற்றும் மீட்புப்பணிக்காகப் பல்வேறு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கின்றன


Related Post