பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீலகிரி மாவட்டம் மசினகுடி வந்தடைந்தார்.
மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் , வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாதுறை அமைச்சர் ராமசந்திரன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து குடியரசுத்தலைவர் முர்முவை வரவேற்றனர்.
மசினகுடியில் இருந்து முதுமலை வனசாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு வருகை புரிந்தார். குடியரசு தலைவருக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று மாலை சென்னை வரும் அவர் நாளை நாளை காலை, சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.