காத்மாண்ட்: நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நம் நாட்டின் அருகே இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நாடு நேபாளம். இந்த நாடு மிகவும் சிறிய நாடாகும். தலைநகராக காத்மாண்ட் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிகாலையில் மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை இந்திய தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛21.12.2024ல் அதிகாலை 3.59 மணிக்கு நேபாளத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. அட்சரேகையின் 29.17 வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.59 கிழக்கில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்தது'' என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது? சேதம் ஏதும் ஏற்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பான விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.