இது ட்விஸ்ட்டா இருக்கே! ஆப்கானிஸ்தான் உள்ளே போன பாக். ஏர்போர்ஸ்! தாலிபான் மீது அட்டாக்! மூண்ட போர்?

post-img
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மையங்கள், தளவாடகங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் உள்ளேயே தாலிபான் ஆதரவு - எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. அந்நாட்டு அரசிலேயே தாலிபான் ஆதரவு - எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் தாலிபான் தளவாடகங்கள் மீது பாகிஸ்தான் தாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தளவாட பகுதி என்று கருதப்படும் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு நடந்த இந்த தாக்குதல்களில் லாமன் உட்பட ஏழு கிராமங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜெட் விமானங்களே காரணம் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் இந்த தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. வான்வழித் தாக்குதல்கள் காரணமாக 15 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்தன, பலர் கடுமையாக காயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கும் பட்சத்தில் அது இரண்டு நாட்டு மோதலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய தாங்கும் இடங்கள், தளவாடகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தான் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது. பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. யார் இவர்கள்?: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) 2007 இல் உருவாக்கப்பட்டது, பல்வேறு கடுமையான சன்னி இஸ்லாமிய குழுக்களின் அமைப்பாக இது உருவாக்கப்பட்டு வந்தது. பாகிஸ்தானில் தனித்தனியாக செயல்பட்டு வந்த பழங்குடி போராளி குழுக்கள் எல்லாம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியது. மறைந்த பைத்துல்லா மெஹ்சூத் தலைமையில் உருவாக்கப்பட்டது. TTP ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான் எல்லையில் தற்போது மிகப்பெரிய போராளி அமைப்பாக உள்ளது. TTP யில் 30,000 முதல் 35,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். பல தற்கொலை குண்டுவெடிப்புகள், தாக்குதலை இந்த அமைப்பு பாகிஸ்தானில் நடத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி தாலிபான் மையங்கள், தளவாடகங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் உள்ளேயே தாலிபான் ஆதரவு - எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும்.. இப்போது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது.

Related Post