சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.16) எந்த மாற்றமும் இல்லாமல் டிசம்பர் 14 ஆம் தேதி விற்கப்பட்ட விலைக்கே விற்பனையாகிறது. நேற்றைய தினம் மார்கெட் விடுமுறையால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் டிசம்பர் 16ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் நேற்று விற்கப்பட்ட விலைக்கே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு 1160 ரூபாய் குறைந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை ஏறுமா, குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சென்னையில் டிசம்பர் 14-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 720 குறைந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,120 -க்கும் கிராமுக்கு ரூ 90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7,140 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் தங்கம் விலை டிசம்பர் 13 ஆம் தேதி ஒரு சவரனுக்கு 440 குறைந்து ரூ 57,840-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ 55 குறைந்திருந்தது.
சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி சவரனுக்கு ரூ 640 உயர்ந்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில் டிசம்பர் 11 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,285-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 103-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,03,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 10 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,640 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 75 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,205-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் ஒரே நாளில் கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 104-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.