கோவையில் திடீர் மாற்றம்.. எந்தெந்த ரூட்டெல்லாம் இன்று முதல் மாறுது.. போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

post-img
கோவை: கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனி முதல் கோவில்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் துவங்க உள்ள நிலையில், கோவை மாநகர காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அத்துடன், போக்குவரத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட துடியலூர் என் ஜி ஜி ஓ காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் இன்று முதல் நடைபெற இருப்பதால் துடியலூர் என் ஜி ஜி ஓ காலணியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வாகனங்கள் மற்றும் கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி செல்லும் வாகன போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது. துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம் வெள்ளக்கிணர், வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, என் ஜி ஜி ஓ காலனி கணபதி நகர் சென்று வலதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம். கோவில் பாளையத்திலிருந்து துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையம் வழியாக கணபதி நகரில் இடதுபுறம் திரும்பி வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம். துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம் வெள்ளக்கிணர் சரவணம்பட்டி ரோடு கண்ணாம்பு கால்வாயில் இடது புறம் திரும்பி அத்திப்பாளையம் சென்று கோவில்பாளையம் செல்லலாம். கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் கோவில்பாளையம் அத்திப்பாளையத்தில் இடது புறம் திரும்பி கண்ணாம்பு கால்வாய் வழியாக சரவணம்பட்டி காவல் சாலையில் வலதுபுறம் திரும்பி வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Post