சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவனுக்கு இதயத்தில் சிக்கலான நோய் பாதிப்பு உள்ளது. பிறவியிலேயே இருந்த இந்த பாதிப்புக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரையான் அறுவை சிகிச்சை செலவுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆர்சிஎம் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் முகம்மது ரையான். 9 வயதே ஆன சிறுவனான ரையான் தனது வயதுக்கேற்ற குறும்புத்தனம் மற்றும் துடிப்புமிக்க சிறுவனாக பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி இருந்து வருகிறான். ரையானுக்கு சமீப காலமாக உடல் நிலை சரியில்லை. அவனுக்கு தீவிர இதய நோய் பாதிப்பு உள்ளது.
துவக்க காலத்த்தில் இந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் நினைத்தனர். சிறுவனுக்கு இருதயத்தில் (ASD) பகுதியில் ஸ்டண்ட் ஒன்று பொருத்தப்பட்டது. 5 அல்லது ஆறு வயது இந்த இதயத்தில் உள்ள ஒட்டை தானாக சரியாகிவிடும் என்று கருதினார்கள். ஆனால், இது தானாக குணம் ஆகவில்லை. எனவே சிறுவனின் உயிரை காப்பாற்ற அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிசைக்கு ஐசியூ கட்டணம், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் என அனைத்துக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. ரையானின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவனது தந்தை ஷாரிப் ஹோட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு தினமும் ரூ.500 சம்பளமாக கிடைக்கும்.
இந்த வருமானத்தை வைத்து அவரது குடும்ப செலவுகளை ஈடுகட்டவே முடியவில்லை. போதாக்குறைக்கு அவரது மனைவியும் மன நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவரது குடும்ப சூழலை வைத்து பார்த்தால் சிறுவன் ரையானின் சிகிச்சைக்கு அவர்களால் பணம் புரட்ட முடியாது.
எனவே, சிறுவன் ரையான் ஆரோக்கியமாக வாழ உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். துடிப்பு மிக்க சிறுவன் ரையான் ஆரோக்கியமாக வாழ்ந்து வாழ்வில் பல உயர்ந்த லட்சியங்களை எட்ட நீங்கள் உதவுங்கள். உங்களால் எவ்வளவு பணம் உதவியாக அளிக்க முடியோ.. அதை கொடுத்து உதவுங்கள். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு உதவியும் விலை மதிப்பு மிக்கதாக இருக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage