சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைபொருள்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் நட்கர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தையடுத்து, ஜெ.ஜெ.நகர் போலீசார், துக்ளக்கை டிசம்பர் 4 ம் தேதி கைது செய்தனர்.
துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தன்னிடம் இருந்து எந்த போதைபொருளும் பறிமுதல் செய்யபடாத நிலையில் தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.