தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கோடை விழா கடந்த ஜூன் 21 ஆம் தொடங்கி 26 அன்றுடன் நிறைவு பெற்றது. தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தும் விதமாக அம் மாநிலத்தின் தனித்துவமான இசைகளை வாசித்து நடமானடினர்.
அதிலும் குறிப்பாக கன்னட நாட்டின் தனித்துவமான தெய்யம் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. காந்தாரா படத்தின் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க செய்தது. அந்த வகையில் அதை நேரில் கண்ட தஞ்சை மக்கள், ஆச்சரியமாக தெய்யம் நடனத்தை கண்டு ரசித்தனர்.