டாஸ்மாக்கில் ஹேப்பி! நள்ளிரவு 1 மணிவரை மதுபான விற்பனை செய்ய அனுமதி! புத்தாண்டில் அசத்துதே புதுச்சேரி

post-img
புதுச்சேரி: புத்தாண்டு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மதுக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அரசிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் மதுக்கடைகளை திறக்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது, குடிமகன்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. புத்தாண்டு என்றாலே உலகம் முழுவதுமுள்ள அனைவருக்குமே கொண்டாட்டம்தான். அதிலும் புதுச்சேரியில் சற்று கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். இதற்கு காரணம், ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடவே, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் வருகை புதுச்சேரிக்கு திரண்டு வருவார்கள்.. அதுமட்டுமல்ல, புதுச்சேரி என்றாலே மதுபானங்களுக்கு பெயர் பெற்ற இடமாகும்.. ஏனென்றால், அங்கு மதுவிற்பனைகான வரி மிகவும் குறைவாக இருக்கும்... எனவேதான், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கமான ஒன்றாகும். அதேபோல, ஸ்டார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்... தனியார் ஹோட்டல்களில் பெரிய பெரிய பார்ட்டிகள் நடத்தப்பட்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நாள் முழுவதும் புத்தாண்டு களைக்கட்டும்... இந்த கொண்டாட்டங்களுக்கு மக்கள் இப்போதிருந்தே முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்களாம்.. இதற்கான முன்பதிவுதான் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை, மதுபான கடைகள் வழக்கமாக காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்கவும், ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்படவும் அனுமதி உள்ளது... இதற்குநடுவில் புத்தாண்டை தினத்தையொட்டி, மதுபான கடைகளை கூடுதல் நேரம் திறக்க சிறப்பு அனுமதி வழங்கப்படுவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாகும். அதுபோலவே, இந்த ஆண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, மதுக்கடைகள் மற்றும் பார்கள் கூடுதல் நேரம் திறந்திருக்க கலால்துறை அனுமதி வழங்கியிருக்கிறது... இதுகுறித்து கலால் துணை கமிஷனர் மேத்யூ பிரான்சிஸ், அனைத்து மதுபான கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், "புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு கடை இரவு 11 மணிக்குப் பிறகு மது பானங்களை விற்க விரும்பினால், அவர்கள் அரசுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கமான கடைகளுக்கு, 5,000 ரூபாய் கட்டணமும், பார் வசதி இருந்தால் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க 10,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும். ரெஸ்டோ பார் அல்லது ஹோட்டலாக இருந்தால் 5,000 ரூபாய் கட்டணம், ஹோட்டலில் சிறப்பு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தால் 15,000 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில், இப்போது நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகள் திறக்க கலால்துறை அனுமதி அளித்திருப்பது, மதுப்பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Post