ஆரம்பமே அட்டகாசம்.. 2025 ஜனவரியில் புதன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

post-img
சென்னை: 2025 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. பல கனவுகளுடன் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 2025 கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. வருடப் பிறப்பிலேயே புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த அமைப்பு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழும். 2025 ஜனவரி முதல் வாரத்தில் புதன் கிரகம் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை சனி, குரு, ராகு கேது உள்ளிட்ட முக்கிய கிரகங்கள் அனைத்தின் பெயர்ச்சியும் உள்ளது. இந்த கிரகங்களுடன் புதன் பெயர்ச்சியும் உள்ளது. முக்கியமாக 2025 மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 52 நாட்களுக்கு சூரியன், புதன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒன்றாக பயணிக்கவுள்ளன. இது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதனால் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியையும் உற்று கவனிக்க வேண்டும். அதனடிப்படையில் புதன் கிரகத்தின் பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆண்டின் தொடக்கத்திலேயே நிகழப் போகும் முதல் பெயர்ச்சி புதன் கிரகத்தின் பெயர்ச்சி தான். அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும். இருப்பினும் புதன் பெயர்ச்சியில் சில ராசிகள் அதிகளவு பயனடைய போகின்றன. அப்படி என்னென்ன ராசிகள் புதன் பெயர்ச்சியால் பயனடைய போகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். சிம்மம்: சிம்மம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த அமைப்பால் சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. பணி மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் பட்டையை கிளப்புவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியால் இனிக்கும். உங்களின் அனைத்து முடிவுகளுக்கும் வாழ்க்கை துணை பக்க பலமாக இருப்பார்கள். துலாம்: துலாம் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் உங்கள் மனம் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும். பணியில் நல்ல யோகங்கள் உண்டு. உயரதிகாரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அதனால் பதவி உயர்வுக்கு அதிக வாய்ப்புள்ளது. புதிய பணி, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்கு உகந்த காலகட்டம். உங்களின் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மொத்தமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கும்பம்: கும்பம் ராசிக்கு 11வது இடத்துக்கு புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த பழைய முதலீட்டில் இருந்தும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன், செல்வாக்கு உயரும். சவாலான பணிகளை கூட எளிமையாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். அலுவல் தொடர்பான வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும். மாணவர்கள் படிப்பு கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் தொழில்களை தொடங்குவதற்கு இது சரியான காலகட்டம். பிரிந்து சென்ற உறவுகள் இணைவார்கள். உறவுகளால் ஆதயம் உண்டு.

Related Post