சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன், ''கங்குவா படத்தில் முழுமையாக வரலாற்று காட்சிகள் இடம்பெறாது எனவும், அது படத்தின் ஒரு பகுதிதான் எனவும் தெரிவித்தார். மேலும் இந்தப் படமானது தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் நடக்கும் பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிட்டுள்ளார். ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படத்தின் தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், 'கங்குவா' திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கங்குவா படத்தின் இரண்டு சீன்களை பார்த்தேன், அற்புதமாக இருந்தது. சிறுத்தை சிவா வெறித்தனமாக வேலை பார்த்து வருகிறார். சூர்யா வேற லெவல்ல நடித்திருக்கிறார். சினிமா ரசிகர்களுக்கு 'கங்குவா' மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.