தமிழக அரசு தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.வலுக்கும் கண்டனம்

post-img

 இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனையை கேள்விப்பட்டு உடனடியாக வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோன்று, சென்னை அபிராமபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக்குமாரின் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Nadu: DMK Members Manhandled Officials, Vandalised Vehicles Of Income  Tax Says Annamalai As Raids Underway Against Senthil Balaji

இந்நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. இதுபோன்ற மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைகள் எல்லாம் மோடி அரசின் வெட்கக்கேடான தாக்குதல்கள் ஆகும்.

புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது என்பது மோடி அரசின் தனித்துவமான நடவடிக்கை. எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் மோடி அரசின் இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறாது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடும் எதிர்க்கட்சிகளை இந்த சோதனைகள் பலப்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், எதிர்க்கட்சிகளை துன்புறுத்தவும், மிரட்டவும் மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனையை கண்டிக்கிறேன். கண்மூடித்தனமான அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கைகளால் சரி செய்ய முடியாத சேதத்தை பாஜக ஜனநாயகத்திற்கு ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, திமுக அரசுக்கு எதிராக பாஜக நடத்தும் அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையை கண்டிக்கிறேன். மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தமிழக அரசு தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திலும், அவரது இல்லத்திலும்  சோதனை நடத்தப்பட்டிருப்பது ஏற்க முடியாது. அவநம்பிக்கையால் பாஜக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

Related Post