படத்தில் ”கிறிஸ்துமஸ் மரம்” எங்கே இருக்கு? 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!

post-img
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிறிஸ்துமஸ் மரம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு 7 செகண்ட் டைம் கொடுக்கிறோம். அதற்குள் நீங்கள் கிறிஸ்துமஸ் மரம் எங்கே இருக்கு என்று கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதிபுத்திசாலிதான். என்ன சவாலுக்கு ரெடியா?.. வாங்க கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்வார்கள். பார்க்கும் நம் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும். நம் கண்களையே பொய்யாக நம்ப வைத்து ஏமாற்றி விடும். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து பலரும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாந்து போய்விடுகிறார்கள். ஒரு சிலரோ எப்படியாவது விடையை கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று படத்தை அங்குலம் அங்குலமாக தேடிப்பார்ப்பார்கள். ஒரு வழியாக விடையை கண்டுபிடித்துவிட்டால் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுவிடுவார்கள். பின்னர் தங்களது நட்பு வட்டாரங்களுக்கு இந்த படத்தை அனுப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சவால் விடுப்பார்கள். இதன் காரணமாகவே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் அதற்கு தகுந்தாற்போலவே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், கிறிஸ்துமஸ் மரம் எங்கே இருக்கிறது? என்று தான். இதற்காக 7 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் படத்தில் மறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். என்ன சவாலுக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..7. ஓக்கே டைம் ஓவர். என்ன கண்டுபிடிக்க முடிந்ததா?.. 7 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க அதிபுத்திசாலி தான். உங்க பார்வை கழுகுப்பார்வை தான். ஆனால் 7 செகண்ட் டைம் முடிந்தும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டும். கூடுதலாக இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். ஆனால் ரொம்ப நேரம் தேடியாச்சுங்க.. அப்படியும் கண்டுபிடிக்கவே முடியவில்லைங்க.. என்று சொல்பவரா நீங்க.. உங்களுக்காக ஒரு குழு தருகிறோம். அதாவது இந்த படத்தின் அடிப்பகுதியில் வலதுபக்கம் மட்டும் உற்று கவனித்து பாருங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ரெகுலராக பார்த்து வருபவர்கள், ஈசியாக விடையை கண்டுபிடித்து விடுவார்கள். கிறிஸ்துமஸ் மரம் பெரியதாக இருக்கும் என்று நினைத்து தேடி நேரத்தை வீணடிக்காதீர்கள். மிக குட்டியாகத் தான் இருக்கிறது. எனவே அந்த கோணத்தில் படத்தின் அடிப்பகுதியில் வலதுபக்கம் மட்டும் பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Related Post