'ஜெயிலர்' - சர்ச்சைக்குரிய ஆர்சிபி ஜெர்சி காட்சியை நீக்க நீதிமன்றம் உத்தரவு

post-img

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் ஜெர்சியை அணிந்திருந்த ஒருவர் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பக்கூடிய வகையில் சில கருத்துகளை பேசியதாக கூறி இது தங்கள் அணியின் பிராண்ட் இமேஜை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்த அணியின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அந்த காட்சியை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நீக்கி திரையிடுமாறு ஜெயிலர் படக்குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களிலும் இதே நடைமுறையை பின்பற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Related Post