பாஜக குட்டு வெளிப்பட்டுவிட்டது? மனதில் உள்ளதை அமித்ஷா சொல்கிறார்? : ஆளூர் பதிலடி

post-img
சென்னை: அம்பேத்கர் நினைவிடங்களைப் புனரமைப்பது அல்ல சமூகநீதி அரசியல் என்றும் பாஜக செய்வது அடையாள அரசியல் என்றும் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரைப் பற்றி இழிவுபடுத்தும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி விட்டார் என காங்கிரஸ் கட்சி கொதித்துப் போய் போராட்டம் நடத்தி வருகிறது. இரண்டு நாட்கள் முன்னதாக மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரையே சொல்கிறார்கள். அது ஒரு பேஷனாக மாறிவிட்டது. அதற்குப் பதில் பகவான் பெயரை உச்சரித்தால் அடுத்த ஜென்மத்தில் சொர்க்கமாவது கிடைக்கும்’ என்று கூறியிருந்தார். இதுதான் சர்ச்சைக்கு முக்கியமான காரணமாக மாறியது. ஆனால், இந்தச் சர்ச்சைக்குப் பின்னர் அன்று மாலையே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமித்ஷா, “அம்பேத்கர் நினைவிடம் இருக்கும் சைத்ய பூமி நிலப் பிரச்சினையை பாஜகதான் தீர்த்து வைத்தது. டெல்லி அல்லிபூர் சாலையில் அவர் வாழ்ந்த வீட்டை பாஜகதான் புனரமைத்தோம். அதேபோல் லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை மத்திய அரசு கையகப்படுத்தி இருக்கிறது. அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதைக் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ். அந்த விருதுகளை நேரு 1955 இல் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். 1971இல் இந்திரா காந்தி இந்த விருதை அவருக்கே வழங்கிக் கொண்டார். 1990இல் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறவில்லை” என்று நீண்ட புள்ளி விவரங்களைக் கொடுத்திருந்தார். ஆனாலும் இந்தச் சர்ச்சை இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'அம்பேத்கர் இல்லை என்றால் மோடி பிரதமராகி இருக்க முடியாது’ என்று கூறியுள்ளார். விஜய் தன் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அமித்ஷா அம்பேத்கரை எங்கே வைத்திருக்கிறார்? அவர் பகவானை எங்கே வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம். அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். பாஜக குட்டு வெளிப்பட்டுவிட்டது” என்று பேசி இருக்கிறார்.

Related Post