எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மரணம்.. காலை 8.30 மணிக்கு நடந்தது என்ன?

post-img

ஆதி குணசேகரன் என்று பலராலும் அழைக்கப்பட்ட.. மக்கள் மத்தியில் தன்னுடைய நெகட்டிவ் காதாபாத்திரங்கள் மூலமே கவனிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்தார். அவரின் மரணம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்., 'எதிர்நீச்சல்' தொடர் மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் பெற்றார் மாரிமுத்து.

இந்த நிலையில் அவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி போட்டுள்ளது. 57 வயதான அவர் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் அவரின் வேடம் கவனம் பெற்றது.,

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி காந்த், நடிகர் மோகன்லால், நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் திரையில் விசில் அடிக்கப்பட்டது போலவே இவருக்கும் அடிக்கப்பட்டது. இவர் வரும் போதே ஏம்மா ஏய் என்று ரசிகர்கள் உற்சாகமாக கத்தி இவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அவர் சொல்லும் வசனம் ஆகும் இது. 'எதிர்நீச்சல்' நெடுந்தொடர் தனக்கு பெரும் புகழைத் தேடித் தந்திருப்பதாக அவரும் கூட பல இடங்களில் குறிப்பிட்டு இருந்தார். ஆதி குணசேகரன் என்ற பெயரில் இவர் நடித்தது தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது. மதுரை மண் மணக்கும் தமிழில் மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கூடிய இவர் மக்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்று இருந்தார்.

நெகட்டிவ் காதாபாத்திரங்கள் மூலமே கவனிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்தார். அவரின் மரணம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஆர்ஓ: இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான சிலரிடமும், சின்னத்திரையுலக பிஆர்ஓக்களிடமும் பேசினோம்.

அவர்கள் அம்மிடம் கூறுகையில்.. இன்று அதிகாலையே அவருக்கு டப்பிங் பேசும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதேபோல் அவரின் இதய துடிப்பும் வேகமாக இருந்துள்ளது.

இதற்கு அவர் சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காலையில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை மருத்துவமனைக்கு இதையடுத்து அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சரியாக 8.30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டப்பிங்கில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் இவர் தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட போதுதான் அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கேதான் தற்போது நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உணவு பழக்கம், அவருக்கு இளம் காலத்தில் இருந்த பிரஷர், டென்ஷன் இவையே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனையும் இருந்ததாக பிஆர்ஓ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாரிமுத்துவின் திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அவரின் மறைவிற்கு சென்னையிலும் இன்று அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Related Post