நியூயார்க்: 2025ம் ஆண்டிற்காக நாஸ்டர்டாமஸ் வெளியிட்டதாக சொல்லப்பட்ட கணிப்புகளில் ஒன்று நிஜமாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அது கேன்சர் மருந்து கண்டுபிடிப்பு. கொடிய கொல்லி நோய் ஒன்றிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நாஸ்டர்டாமஸ் கூறியது நிஜமாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்.
ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், கடைசி டெஸ்ட் நடந்து வருவதாகவும் விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின்.,. ஊசியா.. வேறு எதுவுமே? எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்றெல்லாம் புடின் விளக்கம் அளிக்கவில்லை.
இதன் மூலம் நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு உண்மையாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.
விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.
2025ல் என்ன நடக்கும்: இந்த நிலையில்தான் தற்போது தொடங்க உள்ள 2025ல் என்ன நடக்கும் என்ற கணிப்புகளை இவரின் புத்தகத்தில் இருந்து வெளியிட்டு உள்ளனர். நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார் என்றுள்ளார்.
"கொடூரமான போர்களால்" சூழப்பட்டு "எதிரிகளை விட மோசமான துரோகங்களால்" சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று எச்சரித்து உள்ளார். "பழங்கால பிளேக்" வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும். இங்கிலாந்துக்கு புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருக்காது.. அதற்கு காரணமாக இந்த பிளேக் அமைந்துவிடும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.