சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ள நிலையில், உதயநிதி அவர்களே, நீங்கள் எந்த செய்திகளையும் பார்ப்பதில்லை. சினிமா மட்டுமே பார்க்கிறீர்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், நீங்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
விகடம் பதிப்பகம் சார்பில், சென்னை வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 2026 தேர்தலில் திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்றும், மன்னராட்சி குறித்தும் பேசியிருந்தார். மேலும், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். வேங்கை வயல் சம்பவத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வெள்ளப் பாதிப்பின் போது சம்பிரதாயத்துக்கு ட்வீட் போடுவது, அறிக்கை விடுவது, வெள்ளத்தில் இறங்கி போட்டு எடுத்துக்கொள்கின்றனர்.
இதுபோன்று இல்லாமல் உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால், இதைப் பற்றி கவலைப்படாமல் எகத்தாளமாக கூட்டடணி கட்சிகள் இருக்கிறது என 200 தொகுதிகளில் வெல்வோம். உங்களுக்கு மக்களோடு மக்களாக இருந்து ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். வரும் 2026 தேர்தலில் நீங்க நம்பிய கூட்டணி கணக்குகள் உங்களுக்கே மைனஸ் ஆக மாறும் என்று பேசியிருந்தார்.
அதேபோல ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து, வேலூரில் இன்று செய்தியாளர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், யாருங்க பிறப்பால் முதல்வர் ஆனாங்க.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தானே முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆனாங்க.. மக்களாட்சி தான் நடக்கிறது. இந்த அறிவுகூட இல்லையா.. என்று பதில் அளித்தார். இதேபோன்று விஜய் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை" என்று பதில் அளித்தார்.
இதுகுறித்து, நடிகை காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: உதயநிதி அவர்களே, நீங்கள் எந்த சினிமா செய்திகளையும் தமிழ்நாட்டுச் செய்திகளையும் இந்தியச் செய்திகளையும் உலக செய்திகளையும் பார்ப்பதில்லை. நீங்கள் சினிமா மட்டுமே பார்க்கிறீர்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், நீங்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்.
வடிகால் நீர் குடிநீரில் கலந்ததால் காய்ச்சலும், நோய்களும் பரவுவதில்லை, என்றீர்கள். எங்கும் வெள்ளம் இல்லை தண்ணீர் தேங்கவில்லை என்று சொன்னீர்கள். சினிமா ஷூட்டிங் ராஜா வீட்டு கன்று போல அரசியல் செய்கிறீர்கள். நீங்கள் சினிமா கனவில் வாழ்கிறீர்கள். எந்த ஒரு பொது மக்களுக்கும் எந்த வகையிலும் பயன்படாது.
இன்று அவர்கள் உங்களை துரத்திவிட்டார்கள். நாளை மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். இந்த அணுகுமுறையுடன் நீங்கள் ஒருபோதும் மக்களின் விருப்பமாக அல்லது மக்களின் தலைவர் இருக்க மாட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage