இந்த படத்தில் முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க..

post-img

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகின்றது என்பதை வைத்து உங்களுடைய கேரக்டர் எப்படி என்று தெரிந்துகொள்ள முடியும். அதை இங்கே பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. நேரம் கிடைக்கும் பொதெல்லாம் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இல்யூஷன் படங்கள் நல்ல பயனுள்ள பொழுது போக்காக உள்ளது. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை நேரடியாக விடைகள் தெரியாது. மேலோட்டமாக பார்த்தால் நம் கண்ணுக்கு ஒரு விஷயம் தெரியும்.


அதையே உற்று பார்த்தால் வேறொரு ஒரு விஷயம் தெரியும்.
அதாவது, நம் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக அமைந்து இருக்கும். சவாலுக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது அது நம் பார்வை திறன் மற்றும் அறிவு திறனுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும் என்பதால் நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிலவகை ஆப்டிகல் இல்யூஷன்களை வைத்து ஒருவரது கேரக்டரைக் கூட ஓரளவு கணித்து விடலாம் என்று சொல்கிறார்கள்.
ஆப்டில் இல்யூஷன்: அந்த வகையில் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டில் இல்யூஷன் படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். அதை வைத்து உங்கள் கேரக்டர் எப்படி உள்ளது என்பதை ஓரளவு யூகித்து விடலாம். சரி.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை பாருங்கள். இந்த படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்... அதை வைத்து உங்கள் கேரக்டர் எப்படி என்று சொல்லிவிடுகிறோம்.
உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. யானைகளுக்கு நடுவே பதுங்கியிருக்கும் பூனை.. 7 செகண்ட் தான் டைம் கண்டுபிடிங்க
தண்டாவளம் முதலில் தெரிந்தால்:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தண்டவாளம் முதலில் தெரிந்தால் எந்த வேலையை எடுத்தாலும் அதை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்து இருப்பீர்கள். நெருக்கமான சிலருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.
கடினமான காலங்களில் இருந்தாலும் உடனே மீண்டு வருவதற்கான பலத்தை இந்த சவால்கள் உங்களு கொடுத்து இருக்கும். மற்றவர்கள் உங்களை அடிக்கடி சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். இது உங்களுக்கு சற்று மன வேதனையை கொடுக்கலாம். சோதனையான காலமாக இருந்தாலும் கொஞ்சம் உங்கள் அணுகுமுறையை மாற்றினால் பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு அமையும்.
கற்கள் உங்கள் கண்களுக்கு தெரிந்தால்:
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு ஆயிரக்கணக்கான கற்கள் தான் முதலில் தெரிந்தது என்றால் சமீபத்தில்தான் மிக சவாலான கட்டத்தை கடந்து வந்து இருக்கலாம். சற்று பின்னடைவுகளையும் எதிர்பாராத தடைகளையும் சந்தித்தாலும் எளிதில் அதில் இருந்து கடந்து வந்து விடுவீர்கள். இந்த கேரக்டர் டெஸ்ட் என்பது இல்யூஷன் படங்களை வைத்து கணிக்கப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும். இருப்பினும் ஒருவருடைய சூழலுக்கு ஏற்றார் போல் இது மாறுபடலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்..

 

Related Post