சென்னையில் பணி.. ரூ.50,000 டூ ரூ.70,000 வரை சம்பளம்! அழைக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

post-img

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Tamil Nadu Pollution Control Board or TNPCB) செயல்பட்டு வருகிறது.

சென்னை கிண்டி மவுண்ட் சாலையில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் தாான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.

ரெடியா? கைநிறைய சம்பளம்..10ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களை அழைக்கும் இஸ்ரோ!

அதன்படி ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் I பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் II பணிக்கு ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000 சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் II மாதம் ரூ.50,000 சம்பளம் என்பது வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Environmental Science, Environmental Engineering, Environmental Biotechnology, Management உள்ளிட்ட படிப்புகளில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வாகும் நபர்கள் 12 மாதம் வரை பணியமர்த்தப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 8 ம் தேதிக்குள் tnpcb.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து சுயசான்றொப்பமிட்ட (Self Attested) சான்றிதழ்களின் நகல்களுடன் Tamil Nadu Pollution Control Board, 76 Mount Salai, Guindy, Chennai 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு என்பது இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

 

Related Post